பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 69 யோரத்தாரென்னு மொழியை மாற்றிவிட்டு அக்கிர ஆரத்தார் அக்கிர ஆரத்தாரென வழங்கி வருகின்ருர்கள். இத்தியாதி மாறுபாடுகளில் இப்பறையர்களென்னும் பெயர் சத்துருக்களாகியத் தங்களால் கொடுத்ததல்ல. பூர்வத்திலிருந்தே வழங்கி வந்ததைப்போல் ஒர் சமஸ்கிருத சுலோகமொன்றை யேற்படுத்தி வைத்துக்கொண்டு சமயம் நேர்ந்த யிடங்களில் அதை சொல்லிக்கொண்டே திரிகின் ருர்கள். அவற்றை தாங்களே சீர்தூக்கி விசாரிக்க வேண்டியதென்று சொல்லிவிட்டு சேஷனென்பவனை நோக்கி ஐயா தாங்கள் சொல்லிவந்த சுலோகத்தின்படி மக்களாகும் மனிதருற்பவம மானின் வயிற்றிலும், பசுவின் வயிற்றிலும், தவளையின் வயிற்றிலும், நரியின் வயிற்றிலும் உற்பவிப் பதுண்டோ, அத்தகைய வுற்பவங்கள் தற்கால மேதேனு முண்டா, எங்கேனுங் கண்டுள்ளாராவென் றுசாவியபோது யேதொன்றும் பேசாமல் மெளனத்தி லிருந்துவிட்டான். உடனே நத்தனர் அரசனை நோக்கி ஐயனே இவர்கள் கூறியுள்ள சுலோகத்தின் கற்பனை யெவ்வாரென்னில் ஜம்புக னென்னும் பெயருள்ள ஒர் மனிதனிருப்பாயிைன் அவனே நரியின் வயிற்றிற் பிறந்தவனென்றும், கெளதமனென்னும் பெயருள்ள வோர் மனித னிருப்பாயிைன் அவனை பசுவின் வயிற்றிற் பிறந்தவனென்றும், கார்கேய னென்னும் பெயருள்ள வோர் மனித னிருப்பாயிைன் அவனை கழுதை வயிற்றிற் பிறந்தவனென்றும், மாண்டவ்யனென்னும் பெயருள்ளவன் ஒருவனிருப்பாயிைன் அவனை தவளை வயிற்றிற் பிறந்தவ னென்றுங் கற்பித்துக் கூறியக் கட்டுக்கதை சுலோகத்துள் சாங்கயமென்னு மொழு அறு சமயங்களி லொன் ருதலின் அவர்களையும் பெளத்தர்களென்றறிந்து இவர்கள் கொடுத் துள்ளப் பெயரை மாறுபடுத்தி சாங்கயர் பறைச்சி வயிற்றிற் பிறந்தவரென்னும் மொழியையும் அதனுட் புகட்டி பறையனென்னும் பெயரைப் பரவச்செய்து வருகின்ருர்கள். இவ்வாரியர்கள் தற்காலங் கூறிய வடமொழி சுலோகம் முற்றும் பொய்யேயாம். அதாவது மண்முகவாகு சக்கிரவர்த் திக்கும் மாயா தேவிக்கும் பிறந்தவர் கெளதமரென்றும், செள ஸ்தாவென் னு மாயனுக்கும், கோசலை யென்னும்