பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 க. அயோத்திதாஸப் பண்டிதர் அரசாசனமீய்ந்து ஆயாசஞ் தீரச்செய்து சங்கதி யாவற்றையும் விளக்கி மறுநாட் காலேயில் புருசிகர்களாம் ஆரியர்கள் யாவரையும் சபாமண்டபத்திற்கு வரும்படி யாக்கியாபித்தான். அரசன் உத்திரவின் படி மறு நாட் காலையில் ஆரியர்கள் யாவரும் வந்து கூடினர்கள். அஸ்வகோஷரும் சபாநாயக மேற்றுக்கொண்டார். அக்கால் நந்தனெழுந்து ஆரியர்களை நோக்கி ஐயா பெரியோர்களே, தாங்களும் தங்களுடன் வந்த பெண்களும் பிள்ளைகளுமாகிய தாங்கள் யாவரும் பிராமணர் களா. உங்களுக்கு பிராமணர்களென்னும் பெயர் வந்த காரணமென்னே, நீங்களெத்தேசத்தோர், இவ்விடம் வந்த காலமெவை, அவற்றை அதுபவக் காட்சி யுட்பட விளக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டேன். அதனைக் கேட்டிருந்த புருசிகர்கள் தங்களுக்கு பிராமணர்களென்னும் பெயர் வந்த காரணமறியாது பலருங்கூடி வடமொழியை சரிவரப் பேசத்தெரியாமலும், தென்மொழியை சரிவரப் பேசத்தெரியாமலும் உளருவதைக் கண்ட அஸ்வகோஷர் கையமர்த்தி ஆரியர்களே தாங்க ளிவ்விடம் எப்போது வந்து சேர்ந்தீர்கள். நீங்களெடுத்துக் கொண்ட பிராமண வேஷத்தால் சீவனம் சரிகட்டி வருகின்றதாவென் ருர். அதற்கு யாதொரு மாறுத்திரமுஞ் சொல்லாமல் தலை கவிழ்ந்துகொண்டார்கள். அவர்களின் மெளனத்தைக்கண்ட அஸ்வகோஷர் நந்தன நோக்கி அரசே, இவர்களெடுத்துள்ள பிராமண வேஷமானது ஞான நூற்களைக் கற்று நன்குணர்ந்த மேன் மக்களுக்கு விளங்குமேயன்றி ஞான மின்னது அஞ்ஞானமின்னதென்று விளங்காதவர்கள் இவர்களது வேஷத்தைக் கண்டறிவது மிக்க வறிதேயாகும். காரணமோவென்னில் உலக வாசாபாசப் பற்றுக்களில் பெண்ணுசை, பொன்னசை, மண்ணுசையென்னும் மூவாசை களற்று தமோகுணம், ரசோ குன மிரண்டு ம் நசிந்து தண்மெயுண்டாகி சருவ சீவர்களுக்கும் உபகாரியாய் பிரமமனம் வீசியபோது பிராமணனென சகலருங் கொண்டாடுவதுடன் அரசர்கள் முதல் பெரியோர் வரை அவருக்கு வந்தன வழிபாடுகள் செய்து அவரது வேணச் செயலுக்குரியப் பொருளு முதவிசெய்து வருவது வழக்கமாகும். அவரது தெரிசனமாயினும், பரிசனமாயினு முண்டாயவுடன்