பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 க. அயோத்திதாஸப் பண்டிதர் அதுவே தேவாமிர்தமென்றுங் கூறி வஞ்சித்ததில்ை கல்வியற்றக் குடிகளும், காமியமுற்ற அரசர்களும் வேஷப்பிராமணர்களாம் பொய்க்குருக்களின் போதகங்களை மெய்க்குருக்கள் போதகங் களென்றெண்ணி தங்களுடைய கைத்தொழில் விருத்திகளையும், பூமியின் தானியங்களையும், கலைநூல் விருத்திகளையும், ஞான நூல் விருத்தியும், நீதிநூல் விருத்திகளையும் மறந்து கல்லைத் தொழுதுகைத் தொழில் விருத்தி பெறலாமென்றும், கல்லைத் தொழுதால் தானிய விருத்தி பெறலாமென்றும், கல்லைத் தொழுதால் கலை நூல் விருத்திப்பெறலாமென்றும், கல்லை தொழுதால் ஞான நூல் விருத்திப்பெறலாமென்றும், கல்லைத் தொழுதால் நீதிநெறி நூலில் விருத்திப்பெறலாமென்றுங் கருதி தங்களது சுயமுயற்சிகளை விடுத்து சோம்பேறிகளாகி சகல சுகங்களுங் கற்சிலைகளால் கிடைக்குமென்றெண்ணி கற்சிலை களையும், மண் சிலை, மரச்சிலைகளையுமே தெய்வமாக கொண் டாடி அஞ்ஞானத்தி லாழ்ந்து முழு மூகைகளாகுவதை பெளத்த வுபாசகர்கள் கண்டு மனஞ்சகியாது சகல குடிகளுக்கும் தெய்வ மென்னும் மொழியின் சிறப்பினையும் அதன் செயலையும் நன்கு விளக்கிவருவது மன்றி கற்களையும், மரச்சிலைகளையுமே தெய்வமெனக்கருதி நாளும் கேட்டை விளைத்து நாசமடையும் விவரங்களையும் கூறி வந்தார்கள். அதாவது ஒவ்வோர் மதுக்களும் தங்கடங்களறிவுக்குத் தக்கவாறு வேளாளத்தொழிலிலும், வாணிபத்திலும், அரசத் தொழிலிலும், அந்தணத் தொழிலிலு முயலாமல் கற்சிலைகளிடத்தும், மரச்சிலைகளிடத்துஞ் சென்றுவனங்கி தங்கள் செல்வக்குறைகளை நீக்கவேண்டுமென தேகவுபத்திர வங்களைப் போக்கவேண்டு மென்றும், கற் சிலைகளிடத்தில் முறையிட்டு தீர்த்துக்கொள்ள வேண்டுமென்னுங் கருத்தால் தங்கள் சுய முயற்சிகளையும், கைத்தொழில்களையும் விடுத்து கற்சிலைகள் தங்கள் துக்கங்களைப் போக்கி விடுமென்றெண்ணி அதனிடஞ் சென்று விழுந்து விழுந்து தொழுது வரும் வழக்கம் பெருகி வருகிறபடி யால் கவலையென் னுங் குப்பை மேலுமேலுஞ் சேர்ந்து துக்கவிருத்தி அதிகரிப்பதி ல்ை அறிவு மயங்கி சுயமுயற்சிகள் யாவுங் கெட்டு தாங்கள் செய்துள்ள தீவினைகளை நீக்குவதற்கு கற் சிலைகள் ஆதர வாயிருக்கின்றதென் றெண்ணி தினேதினே தீவினைக் குள்ளாகிப்