பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮽ Ꮾ க. அயோத்திதாளலப் பண்டிதர் நிற்பார்கள். கைப் பொருளளிக்காமலும் அவர்களை மதியா ம லும் அவர்கள் வார்த்தைகளை நம்பாமலும் இருந்துவிடுவீராயின் எவ்விதத் தந்திரத்திலுைம் உமதரசைப் பாழ்படுத்தி உம்மெயுங் கெடுத்து ஊரைவிட்டோட்டும் வழியைத் தேடி விடுவார்கள். இவ்வகையாகவே சிற்சில வரசர்களைக் கொன்றும் பெளத்ததன்மப் பள்ளிகளில் சிலதை யழித்தும், சில பள்ளிகளை மாறுபடுத்தியும் அவ்விடமிருந்த #ಉನಕT முநிவர்களையு மகல வைத்து பொருள் வரவுள்ள யிடங்களில் தாங்கள் நிலைத்தும் பொருள் வரவில்லாப் பள்ளிகளை நாசப்படுத்தியும் வந்திருக்கின் ருர்களென மிலேச்சர்களின் பொய் வேஷங்களையும், வஞ்சகக் கூத்துகளையும், கருணையற்ற செயல்களையும், நாணமற்ற வுலாவலையும் நந்தனுக்கு விளக்கிக் காட்டி விட்டு அஸ்வ கோஷா பெளத்தபீட பொதிகையைச் சேர்ந்தவுடன் நந்தன் தனது வேவுகர்களைத் தருவித்து சிந்துாரல் நதியின் குறிப்பும், புருசீக நாட்டின் எல்லையும் எவ்விடம் இருக்கின்றதென்றும், எவ்வழியே கில் சுருக்கமாகக் கண்டு பிடிக்கலாமென்றும் தெரிந்துவரும்படி ஆக்கியாபித்ததின் பேரில் வேவுகர்கள் சென்றிருப்பதை மிலேச்சர்களாம் ஆரியர்களறிந்து ஒ, ஓ, எது நம்முடைய தேசத்திற்குச் சென்று இவ்விடமுள்ளவர்களால் நமது மித்திர பேதங்களே யறிந்து இவ்விடமுள்ள சிற்றரசர்க ளெல்லோருக்கும் தெரிவித்துவிடுவார்களானல் நம்முடைய பிராமண வேஷத்திற்கு பங்கமுண்டாமென்றெண்ணி, நந்தன் அரண்மனைக்கு மேற்கே அரக்காதவழியிலுள்ள வோர்க் காட்டில் மண்மேட்டை தகர்த்து அதன் மத்தியில் கற்றுாண்கள் அமைத்துப் பழையக் கட்டிடம் உள்ளதுபோற்பரப்பி மத்தியில் சிதம்பச் சூத்திரம் நாட்டிவிட்டு வொன்று மறியாதவர்கள்போல் அரசனிடம் ஒடி வந்து அரசே நாங்க ஏதோ இத்தேசத்தில் பிராமணவேஷ மணிந்து சிலாலயங்களைக் கட்டி குடிகளுக்குப் பொய்யைச் சொல்லி பொருள் பரித்துத் தின்பதாய் ஒர் பெரியவர் சொல்லிக்கொண்டு வந்த வார்த்தைகளைத் தாங்க ளெவ்வளவும் நம்பவேண்டாமென்று கோருகிருேம். காரணம் யாதென் பீரேல் தங்களரண்மனைக்கு மேர்க்கே வோர்க் காட்டிலுள்ள மண்மேட்டை வெட்டி வீடு கட்டுவதற்காக மண்ணெடுக்கும்போது அதனுள் சிலக் கற்றளங்கள் தோற்றப் பட்டன. அதை முற்றிலும் பரித்து சோதிக்குமளவில் பழயக்