பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 க. அயோத்திதாஸப் பண்டிதர் சென்று தெரிவித்ததினுல் அவரும் மிகுந்த ஆவலுடன் வந்து ஆலயத்துள் நுழைந்து சுவாமி தெரிசனஞ் செய்து ஆனந்தமாக நிற்குங்கால் சுவாமிக்கு அவர்மீது வன்புண்டாகி நாங்களெல் லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவரை யெடுத்து விழுங்கிவிட்டார். அச்சங்கதிகளைக் குடிகளுக்குத் தெரிவித்ததின் பேரில் அவர்களும் ஆனந்தமாக வந்து சுவாமியை தியானித்துக் கொண்டிருக்குஞ் சமயத்தில் பறையர்களென்னுந் தாழ்ந்தசாதி கூட்டத்தோர் நந்தனுடைய தேசத்தை அபகரித்துக்கொள்ள வேண்டுமென்னு மாசையால் அரசனை யடுத்திருந்த பிராமணர்களாகிய எங்களை அடித்துத் துரத்திக்கொண்டு வருகின்ருர்கள். காரன மியாதெனில், அத்தேசம் நீர்வளம் நிலவளம் நிறைந்த விசேவித்த நஞ்சை பூமிகளுள்ளதும், சுவாமி ஆவாகனஞ் செய்து கொண்ட நந்தனுக்கு வேறு சந்ததிகளில்லாததுமே காரண மாகும். அதுகண்டு இந்த பறையர்களெல்லோரும் ஒன்று கூடி தங்களை மடாதிபர் களென்று சொல்லிக்கொண்டு குடிகளை யேமாற்றி அரசன் மனைவியைக் கைப்பற்றிக்கொள்ளும்படி யாரம்பித்து விட்டார்கள். ஆதலின் தாங்கள் தாமதமில்லாம லெழுந்து சேனைகளுடன் வந்து பறையர்களின் கூட்டத்தை அவ்விடம் விட்டுத் துரத்தி, தேசத்தைக் கைப் பற்றிக்கெள்ளுங்கோளென்று கூறியதை அரசன் கேட்டு நீர்வளம் நிறைந்த பூமியை அபகரிக்க வேண்டுமென்னு மாசையால் படை வீரர்களிற் சிலரை யழைத்துக்கொண்டு புருசீகருடன் சென்று நந்தனரண் மனையைக் கைப்பற்றி முற்றுகையிட்டு தன் இளவல் இலட்சுமணரெளவிடம் ஒப்புவித்து ஆளுகை செலுத்தி வரும்படிச்செய்து தனது தேசத்திற்குப் போய்விட்டான். மிலேச்சர்களாம் ஆரியர்கள் பிராமனவேஷ மணிந்து கொண்டபோது மராஷ் டகர்களுக்குள்ளும், பிராமண வேஷ மணிந்துக்கொண்டவர்க ளிருக்கின்றபடி யால் அப்பாஷைக் குரிய இலட்சுமணரெள அரசு புரிகிறதை யறிந்து அவர்கள் வந்துவிடுவார்களாயின் நமக்கு யாதோ ரதிகாரமும் இல்லாமற் போய்விடு மென்றெண்ணி தம்மைச்சார்ந்த புருசிகர்கள்