பக்கம்:சகல கலாவல்லி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- 本 * à சகல கலாவல்ன்

கமைகள் வெண்டாமரையில் வீற்றிருக்கிருள் என்று உராணம் சொல்கிறது. வெள்ளைத் தாமரை நல்வ உள்ளத் தைக் குறிக்கும். பொதுவாக நம்முடைய உள்ளத்தை இதய கமலம் என்று சொல்வார்கள். உடம்பிலுள்ள தசைப் பிண்ட மாகிய இதயம், தலைகீழாகத் தொங்கும் தாமரை மொட்டுப் போல இருப்பது. ஆளுல் உணர்ச்சி நிறைந்த உள்ளமாகிய இதயமோ தாமரை மலரைப் போல இருப்பது, அதை இதய கமலம் என்று சொல்கிருச்கள். -

  • மலர்மிசை ஏகிஞன்”

என்ற குறளுக்குப் பொருள் சொல்ல வந்த பரிமேலழகர், 'அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினேந்த வடிவோடு விரைந்து சேறலின், ஏகிஞர் என இறந்த காலத்தால் கூறிஞர் என்று எழுதினர். ஆகையால் தாமரை என்பது உள்ளத்தைக் குறிப்பது.

தாமரையில் வெண்டாமரை, செந்தாமரை என்று இரண்டு வகை உண்டு. கமைகள் எழுந்தருளியிருப்பது வெண்டாமரை. வெள்ளே துரப்மைக்கு அடையாளம். தாமரையில் நல்ல தன்மை இருக்கிறது; துரய்மை இருக் கிறது. நம்முடைய உள்ளம் எந்த விதமான மாகமறுவும் அற்றுத் தூய்மையாக இருந்தால் அதன்மேல் கலைமகள் எழுந்தருள்வாள். - . -

தாமரை தண்மை உடையது. தண்மைக்குத்தான் ஈரம் என்று பெயர். ஈரம் என்பது அன்பைக் குறிக்கும்.

"சர அன்பினர் யாதும் குறைவிலாச்

என்பது பெரிய புராணம். தண்மையை உடைய தாமரையில் மணம் இருக்கிறது. அந்த மணந்தான் ஞானம். உண்மையை உணர்வதற்குரிய அறிவு அது. தாமரையில் விரிவு இருக் கிறது. அது சுருக்கம் இல்லாத உள்ளத்தைக் குறிப்பது. அதாவது, குறிப்பிட்ட ஒன்றை மாத்திரம் பார்த்து. அதனி டத்தில் மட்டும் பற்று வைக்கும் தன்மையின்றி விரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/13&oldid=557844" இலிருந்து மீள்விக்கப்பட்டது