பக்கம்:சகல கலாவல்லி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీశ్రీ 象壺副 密@度龜鐵鹽 கவிதையைப் படித்து உணரும்போது தாம் அடைகின்றி கோபம் முதலியன் இயல்:ான கோபம் அல்ல. அவை இன்பத்தைத் தருகின்ற சுவைகள், அதரூல்தான் மீண்டும் கண்ேடும் படிக்க விழைகிருேம். நம் வாழ்க்கையில் நமக்கு உண்டாகும் கோபம், இயல்பான வெகுணி, ஆணுல் கவிதை ல்ே நாம் உணர்வது வெகுளி அன்று; வெகுளிச்சுவை. அவலச்சுவையை உண்டாக்கும் கவிதையில் ஈடுபடும்போது தாம் சில சமயங்களில் கண்ணிர் விடுகிருேம். அது இயல் பாக நமக்கு உண்டாகும் அவலக் கண்ணிங் ஆன்து. அவலச் இஆைசூேல் வின்பும் கண்ணிர் அது. ஒரு வகையில் அதை இன்பக் கண்ணt என்றே சொல்லவேண்டும். வாழ்க்கையில் தேரும் அவலம் துன்பத்தை உண்டாக்கும் துயர நிகழ்ச்சி, கவிதையில் காணும் அவலம் இன்பத்தை உண்டாக்கும். அவலச் சுவை. f -

உாட்டை ஆழ்ந்து படிக்கவேண்டும். முதலில் அந்தப் பாட்டின் வடிவம் நம்மைக் கவரும். பிறகு அதன் கருத்தை உணரவேண்டும். இப்போது கலை உணர்வு எழும். அப்பால் அதிலே ஆழ்ந்து இன்பத்தைப் பெறுவோம். பாட்டின் வடிவம், பொருள், பயன் என்ற இந்த மூன்றை பும் மூன்று நிலைகளில் உணர முடியும். அப்படி மூன்றையும் உணர்ந்தால்தான் பாட்டைப் பயின்றதாகக் கொள்ள முடியும். . . . . *

இலக்கியம் மனிதனே விலங்கு உணர்வினின்றும் உயர்த்தி மனிதன் ஆக்கி, பிறகு பின்னும் உயர்த்தித் தெய்வ நிலையை அடையச் செய்யும். 'தெள்ளுற்ற தமிழ்.அமுதின் சுவை கண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்’ என்று பாரதியார் பாடுகிருர் வாழ்க்கைக்குப் பயன்படாத எதுவும் இலக்கியம் ஆகாது என்பது நம் ந்ாட்டினர் கொள்கை, 'அறம்பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே' என்று இலக்கண்ம் சொல்கிறது. ஆதலின் கல்விக்காகக் கல்வி, கவிதைக்காகக் கவிதை என்று சொல்லும் கருத்தை இந்த நாட்டுப் பெரியோர்கள் ஏற்பதில்.ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/63&oldid=557894" இலிருந்து மீள்விக்கப்பட்டது