பக்கம்:சகல கலாவல்லி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翻魯 சிக்ல் கில்ாவல்வி

செய்வதில் சிறந்தவர். எட்டு வகையான செய்திகளை ஒரே சமயத்தில் உணர்ந்து சொல்லும் அவதானியை அஷ்டாவ தானி என்பர். இப்படியே தசாவதானம், சதாவனம் என்று பல அவதானங்களேச் செய்வதுண்டு. சோட்சால தானிகளும் உண்டு. -

இந்த அவதானக்கலேயும் தமக்கு அருளவேண்டும் என்று வேண்டுகிருர், குமரகுருபரர் முனிவர்.

சொல்விற்பனமும் அவதானமும்.

வாக்கு வன்மை உடையவர்கள் பேச்சை அவையில் உள்ளவர்கள் கேட்டு அப்போதைக்கு மகிழ்ச்சி பெற வார்கள். அவதானம் செய்பவர்களின் ஆற்றல்யும் அவை வினர் கண்டும் கேட்டும் அந்த நேரத்தில் மட்டும் இன்புறு வார்கள். புலவர் அவ்வப்போது பேசிஞலும் அவதானம் செய்தாலும் அந்த நேரத்தோடு நின்றுவிடும். அவையினரி இல காலம் அவற்றை திண்மீது பாராட்டிக் கொண்டிருப் பார்கள். காற்ருேடு போய்விடும் பேச்சை நெடுநாள் நினைத்துக் கொண்டிருக்க முடியாது. அவதானமும் அத் தகையதே. ஒருவர் மிக அழகாகப் பேசுகிருர், அதைக் கேட்டவர்கள் மகிழ்கினர்கள். பேச்சு நிகழ்ந்த காலத் துக்குப் பிறகு கேட்டவர் அதைப்பற்றி வேறு ஒருவரிடம் எடுத்துச் சொல்லும்போது, அந்தச் செய்தியைக் கேட்ட வருக்கு, நேரே கேட்டவருடைய இன்பம் இராது. பல காலத்துக்குமுன் ஒருவர் பேசிய பேச்சைப் பிற்காலத்தில் முழுவதும் நினத்துப் பார்க்க இயலாது. கேட்டவர்க்கன்றி மற்றவர்களுக்கு அந்த அநுபவமும் இராது. அவதானம் செய்பவர்களைப் பார்த்தவர்கள் அடையும் வியப்பும் இல் தகையதே. சில காலம் நின்று பிறகு மறைந்துபோம். பிறர் அதை நன்கு உணர்ந்து வியப்படைய முடியாது. ::இத்தனை அவதானங்கள் செய்தார்' என்று அவையில் இருந்து அநுபவித்தவர் சொன்னுலும் கேட்கிறவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/71&oldid=557902" இலிருந்து மீள்விக்கப்பட்டது