பக்கம்:சகுந்தலா.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

意翰 சகுந்தலா 'இதிலே என்ன பயம்! திடீர்னு சத்தம் கேட்கவும் தூக்கி வாசிப் போட்டுவிட்டது' என்ருன் ரகு. தப்பு. பார்த்திரா, நீர்கூட இந்தத் தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர் என்று அவர் குற்றம் சாட்டவும், அவன் குழப்பமடைந்தான். அக் குழப்பத்தைத் தெளிவு படுத்துவதாக யில்லே அடுத்து அவர் கேட்ட கேள்வி. உம்ம நிறை என்ன ஐயா!' என்று கேட்டார் அவர். வியப்பினுல் விரிந்த கண்கள் அவர் முகத்தில் விளையாட, டிென்னம்ாக கின்றன் அவன். திடீரென்று இப்படிக் கேட் பானேன் என்ற திகைப்பு அவனுக்கு. "அதுதான் மிஸ்டர் உம்ம எடை, உமது வெயிட். நீர் எவ்வளவு கனமிருக்கிறீர் என்பது சரி போகுது. நீர் நூறு பவுண்டு கணமிருக்கலாம். நூறு பவுண்டு பாரத்தைத் தூக்கி அரசிப்போடக் கூடிய எதையும் இப்போ இங்கே காளுேம். அதுவும்போக, குனிந்து கின்ற ஆள் நிமிர்ந்து திரும்பிப் பார்த்தீர். அவ்வளவுதானே தவிர, தூக்கி வாரிப் போடப் பட்ட ஆசாமியாக நீர் காட்சி தரவில்லே. மேலும், கேவலம் ஒலி எப்படி ஒரு மனிதனத் துக்கி வாசிப்போடும்? சுத்தக் கதைப்பு. வெறும் உயர்வு நவிற்சி. யோசியாமலே பேசும் குண்ம். இது நம்மளவுங்க கிட்டே ரொம்ப அதிகமிருக்கு. இதைப்பற்றி உம்மிடமே நான் முன்ல்ை_பேசியிருக்கிறேன். ஆனுல் நீரோ மூளே என்று ஒன்று இருக்கிறதே, அதை உப பேசகிக்கும் விஷயத்திலேகூடச் சோம்பேறித்தனம் வளர்க் கிறிர் : வார்த்தைகளே நிறுத்துப் பேசனும் நண்பரே ! என்ற பெரிய மனிதத்தனம் பண்ணினர் அவர். இம்முறை ரகுராமன் வாய்மூடி மெளனியாக கிற்க வில்லே. நீங்களும் அகாவசியமாகப் பேசி, மற்றவர்களுக் குத் தொல்ல கொடுக்கிறீர்கள். நீங்கள் பேச்சைக் குறைப் பது நல்லது' என்ருன். - ஞானசம்பந்தம் பலமாகச் சிரித்தார். அவன் விமர் சனத்தைப் பற்றி ஏதுவும் கூருமல், அவர் அறிவித்தார், 'இப்போது உங்களுக்குத் தொல்லே கொடுக்கத்தான் வந்தி ருக்கிறேன்' என்று, என்ன, படித்துப் பார்ப்பதற்கென்று இன்னும் காலஞ்சு எழுத்துப் பிரதிகள்...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/102&oldid=814688" இலிருந்து மீள்விக்கப்பட்டது