பக்கம்:சகுந்தலா.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 9 இதுவும் போக, வேறு பல தொல்லேகளும் நேரிடும். எப்பொழுதும் கூச்சலும் தொணதொணப்பும் ஆட்சி புரியும். அடிக்கடி நேரடித் தாக்குதலுக்கும், மனதுக்குப் பிடிக்கா தவர்களின் போரடிப்பு'களுக்கும் ஆளாகவேண்டிய அவசி யம் ஏற்படும் என்ற அச்சம் நிறைந்துவிட்டது அவன் மன தில். அடுத்த விட்டுக்காரர்கள் என்ருலே அருவருக்கத்தகுந்த ஜந்துக்கள், வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய பதார்த்தங் கள் என்று நம்பினுன் அவன். இருந்தாலும், வருகிறவர்கள் எப்படி யிருப்பார்கள் என்று பார்த்துவைக்கலாமே என்ற அவா இல்லாமற் போக வில்லே, அதிகாலேயில் வாசலில் சத்தம் கேட்டதுமே அவன் தன் விட்டு ஜன்னலருகில் வந்து எட்டிப்பார்த்தான். வண்டியிலிருந்து சாமான்களே இறக்கி உள்ளே எடுத் துச்சென்று கொண்டிருந்தார்கள். ஜட்கா ஒன்று வந்து கின்றது. அதிலிருந்து முதலில் அவள்தான் கீழே குதித் தாள். ஆடையைச் சரிப்படுத்திக்கொண்டு திரும்பி அவள் வண்டியினுள்ளிருந்து எதையோ மெதுவாக எடுப்பதைக் கவனித்த ரகுராமன், கூஜா, கீஜா ஏதாவ திருக்கும், என்று கினேத்தான். அது தவறு என்று தெரிந்தது கையில் ஒரு பூனக்குட்டியை அன்பாக ஏந்திய வண்ணம் அவள் நடந்து வந்ததைப் பார்த்ததும். பளிச்சிடும் ஆகாய லேவர்ணப் பட்டாடையும் கறுப்பு ரவிக்கையு மணிந்திருந்தாள் அவள். அவளது சிவப்பு உட லுக்குஅவை அமைவாக, அழகாய், அழகை எடுத்துக்காட்டும் சிறப்புகளாய்த் திகழ்ந்தன. ஸ்நானம் செய்துவிட்டு அவச ரம் அவசரமாகத் தலைமுடியைக் கோதி, சமயத்துக்கேற்ரும் போல் ஒரு பின்னல் போட்டிருந்தது போல் காட்சி யளித்தது. அவள் அசைவினுல் ஆடித் துவண்ட சடை, இரண்டு இலேகளுடன் கூடிய முழுதலர்ந்த ரோஜா மலர் ஒன்றைச் சொருகியிருந்தாள் கூந்தலிலே. உள்ளத் தின் மகிழ்வு இதழ்களிலே சிரிக்க, அந்தக் குறுநகை கருவிழி களிலே பிரதிபலிக்க தலைநிமிர்ந்து நடந்து முன்னேறி விட் டினுள் மறைந்தாள் அவள். : அவளது சிரிப்பை, கிரிப்பின் தன்மையை அதிகரித்துக் காட்டிய கிரிக்கும் கண்களே, அவற்ருல் தனி மலர்ச்சி பெற்ற முகத்தை ரகுராமன் ஒரு கணம்தான் பார்த்தான். எழிலின் கொலுபிடமான அத் தோற்றத்தை அவன் மறக்க முடியாது தான.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/11&oldid=814696" இலிருந்து மீள்விக்கப்பட்டது