பக்கம்:சகுந்தலா.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10& சகுந்தலா அதிகமாகப் பேச்சுகள் கொடுத்து ஏச்சுகள் வாங்கத் தயாராக இல்லாத உலகு மெளனமாகப் போய்விட்டாள். அன்றைய விருந்து ரகுராமனுக்குப் பூரண இனிமை தர வில்லே. யாருக்குமே பூரண திருப்தி தந்ததாகத் திெரிய வில்லே. எவ்வளவோ சிரத்தை எடுத்திருந்தும் எல்லாம் ஒரு சிறு விஷயத்தில் கெட்டுவிட்டதே என்ற வேதனே கிலேத்து விட்டது சகுந்தலேயின் மனதில். தவறு நடந்துவிட்டது. சரிதான். அதற்காக இவர் இப்படியா நடந்து கொள்ள வேண்டும் அதுவும் விருந்து சாப்பிட வந்தவர் எதிரில் !” என்று குமைக்தது அவள் உள்ளம். விருந்து சாப்பாட்டைப் பற்றிய குறை எதுவுமில்லே தான். எனினும் தான் விருந்து சாப்பிடப் போனதல்ைதான், சகுக்தலே ஏச்சு வாங்க நேர்ந்தது என்ற அர்த்தமற்ற மனக் கஷ்டம் ஏற்பட்டது அவனுக்கு. அதனால் அவன் உணவுத் தயாரிப்புகளின் சிறப்பை நன்கு ருசித்து ரசிக்க இயலாமல், போயிற்து. சாப்பிட்டு முடிந்ததும் என்ன கறிவகைகளெல்லாம். எப்படி ' என்று ஞானசம்பந்தம் கேட்டதும் அருமையாக க்தன என்ருன் அவன். அவர் கணேப்புச் சிரிப்பு நீங்க வேறென்னத்தைச் சொல்லப்போlங்க ? நல்லா பில்லேன்னு கண்டாச் சொல்லமுடியுமா உம்மாலே கல்லா யில்லாமல் இருந்தால் கூட, ஆகா அருமையின்னு தான் சொல்லுவிர். அதுதான் வாழ்வின் வழக்கம். உள்ளொன்று: ు; த்து : புறமொன்று பேசக்கூடாதுன் னு போதிக்கத் தவறுவதில்லே. ஆனல் மனசிலே கினேக்கிறதை வெளியே சொல்லப்படாது என்கிற பழக்கம் அழுத்தமாக வேரூன்றி வருது, உம்மைக் குறை கூறலேய்யா! மனித வாழ்க்கையே போலிச் சம்பிரதாய்ப் ப்கட்டுகளால் மூடி மறைக்கப்படுகிற அழுக்குக் குட்டையாகிவிட்டது என்று உபதேசம் அருளி ஒ அவர், யோசிக்க வேண்டிய விஷயம் தான் என்று தலையாட்டி விட்டு நகர்ந்தான் ரகு. - r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/110&oldid=814697" இலிருந்து மீள்விக்கப்பட்டது