பக்கம்:சகுந்தலா.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா HC go — 15 — அற்புதங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை வாழ்க்கையிலேதேக்க கில்ே படிந்து ஒரே வறட்சி மயமாகத் தோன்றும் வாழ்வில் சில சமயம் திடீரென அதிசயங்கள் தலே துரக்கும். தொடர்ந்து வளரலாம் அவை. வளராமல், ஒரே ஒரு முறை சிரிப்புக் காட்டியதுடன் மறைந்தும் விடலாம். * ரகுராமனின் சாரமற்ற வாழ்க்கையில் திடீரென்று விளே பாடத் தொடங்கிய அற்புதங்கள் சட்டென எங்கோ போய்' ஒளிந்து கொண்டன : விபத்துக்களோ விபரீதங்களோ எதிர்ப்படாமல் சாதாரணமாக நாட்கள் தேய்ந்து மடிந்தன. வழக்கம்போல் படிப்பது, படுத்துத் துரங்குவது, அங்கு மிங்கும் திரிவது என்ற வகையில் காலக் கொலே செய்து வந்தான் அவன். + அடுத்த விட்டு ஞானசம்பந்தம் வெளியூர்ப் பிரயாணம் போகவில்லே. எனினும் அவராது அதிகம் பழகும். ஆர்வம் காட்டாத போது, தான் தினந்தோறும் அவரைத் தேடிப் போனுல் அதைத் தொல்லேயாகவே கருதிவிடுவார் என்று. எண்ணிஜன் அவன். ஆகையில்ை அவரை அடிக்கது சக்திக்கும் சக்தர்ப்பங்களே ஏற்படுத்திக் கொள்ள அவன் துடிக்கவில்லே. தவிர்க்க முடியாதவாறு அவர் எதிர்ப் பட்டால் தான் ஏதாவது பேச்சுக் கொடுப்பது என்பதைத் தனது கொள்கையாக்கிக் கொண்டான் ரகு. அடுத்த வீட்டில் பெண்களே இல்லேயோ என்ற மயக்கம் எழுப்பும் வகையில் மாறிவிட்டது சூழ்நிலை என்று உணர்க் தான் அவன். அதாவது, முதன் முதலாக சகுந்தலேயையும் உலகையும் பார்ப்பதற்கு முக்தி நீடித்த கிலேமையே மறுபடி யும் அடுத்த விட்டைக் கவிந்து விட்டது என்று கருதின்ை. இதற்கெல்லாம் காரணம் என்ன இருக்க முடியும் வீட்டுப் பெரியவர் சதா அங்கேயே தங்கியிருப்பதனுல் மற்றவர்கள் தம் சுயப் பண்பை அடக்கி ஒடுக்கிக் கொண்டு அடங்கியிருக் கிரு.ர்கள், அவ்வளவுதான் என்று அவன் கம்பினன். இரவு வேளைகளில் தம்பி, தம்பி ' எனும் கூவல் எப் பொழுதாவது எழத்தான் செய்தது. சில சமயம் ஒன்றிரு. தடவைகளுடன் அடங்கிவிடும். சில தடவைகளில் மிகப் பல் தடவைகள் ஒலிக்கும். சில் நாள் பெருங் கூச்சலாக எழு. வது, சில தினங்களில் குறைந்த தொனியில் பரவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/111&oldid=814698" இலிருந்து மீள்விக்கப்பட்டது