பக்கம்:சகுந்தலா.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 115 அவன் ஆச்சர்யம் அளவு கடந்து போய்விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தினுல் தானே என்னவோ, அந்தக் கிழவி தானுகப் புலம்பும் தோரணையில் குரல் எழுப்பினுள் : உம், பொண்ணுய்ப் பொறந்தாலே சன்மம் பூராவும் கட்டம் தான். பிறந்த விடும் செளகரிய மில்லாமே யிருந்து, வாழ வந்த வீடும் சுகமில்லாமல் போனுல் ஒரு பொண்ணு த்ான் என்ன செய்யும் ? பாவம் !’ - என்ன பாட்டி விஷயம் ? என்ருன் ரகு. விசயமென்ன விசயம். இந்த உலகத்திலே பொண் ளுய் பிறந்து புண்ணுக -ಜ್ಜುå9೧ ಹT எண்ணி வருத்தப் படுதேன். நான் வேறே என்ன செய்ய முடியும் ' என்று அலுப்புடன் பேசினுள் கிழவி. ஏன், உனக்கு என்ன கஷ்டம் வந்து விட்டது. இப்ப ? எனக்குக் கயிட்டம் வந்தால் தான வருத்தப்படனும் ? எல்லாரும், நமக்கு வேண்டியவங்க, தெரிஞ்சவங்க, ககமாக இருந்தால் தானே நாமும் சந்தோஷமாயிருக்க முடியும். பக்கத்து வீட்டிலே சகுந்தலே இருக்காளே, அந்தப் பொண்ணே நினேத்தால் எனக்குக் கூட ஒரு மூச்சு அழனும் போலிருக்கு.' அவளுக்கு என்ன வந்து விட்டது பாட்டி : என்ன வரணும் ! புருஷன்னு ஒருத்தன் வந்து வாய்ச் சிருக்கானே அந்த ஒரு தொல்லே போதாதா ? அந்த மனுஷ னுக்கு எங்காவது ஊருக்குத் தொலேஞ்சு போகணும்னு எண்ணம் வந்தால், அதுக்கு முன்னுடி விட்டிலே ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்து விட்டுத்தான் டோணும்னு விதி யிருக்கு போலிருக்கு. அதேைல அந்த அப்பாவிப் பொண்ணு பாடு தான் சங்கடமாய் போகுது. ஏச்சும் பேச்சும், அடியும் வசவும், கையிலே கிடைக்கிறதை, தூக்கி விசிறி அடிக்கிற தும்-செச்சே, மனுசச் சன்மமில்லே அந்த ஆளு : ரகுராமனுக்கு நெஞ்சு திக்திக் கென்றது. ஐயோ திரும்பவும் அவளே அவர் அடித்தாரா !' என்று பதட்டத் துடன் கேட்டான். அன்னைய மாதிரி பேயறை அறையலே. அடி விழுந் திருக்கும் அவள் பேசாமல் அடுப்படிக்குள்ளே போய் உட்கர்ர்ந்திட்டாளாம். பேச்சு தடிச்சுது : பேச்சிலே கியாய மில்லன்ன்தும் பக்கத்திலே யிருந்த சருவச் செம்பைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/117&oldid=814704" இலிருந்து மீள்விக்கப்பட்டது