பக்கம்:சகுந்தலா.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா í í பார்கள்? அவளாகவே இருக்குமோ? அதை ஆராய விரும்பி யும் அவன் குணம் அவனுக்குத் துணேபுரிய வில்லே. அதி காலேயில் போர்வையை இழுத்து நன்ருக மூடிக்கொண்டு துரங்குவதுதான் சுகமாக யிருந்தது. சிரமத்தைப் பாராட்டாமல் ஒருநாள் சீக்கிரமே எழுந்து வந்து பார்த்தான். அடுத்த விட்டில் கோலம் போடுகிற வளோ அவனே விடச் சிக்கிரமாக எழுந்து வேலேகளே முடித் துக்கொண்டு உள்ளே போய்விட்டாள். படியேறிச் செல் லும் பாவை ஒருத்தியை அவன் காணமுடிந்தது. அந்தப் பெண்தான் முதல்நாள் வந்தவளா என்பதை அவனுல் தீர் மானிக்க முடியவில்லே. சில வேளேகளில் பின்பக்கம் கிணற்றில் தண்ணீர் இறைத்த சுவடிருக்கும். ஆனல் யார் வந்து எப்பொழுது இறைத்துப் போர்ைகள் என்பது புரியாது. அவன் வெளியே சுற்றிவிட்டு விடு திரும்பும்போது அடுத்தவிட்டு மாடியில் சுவர் ஒரத்தில் ஒரு பெண் நிற்பதைக் காண்டான். அது அந்த அழகிதானு என்று கவனிப்பதற்குள் அவள் சடக்கெனப் பதுங்கிவிடுவாள் சுவரின் பின்னே. சிலநாட்களில் காலேயில் வெளியே போகும்போது அடுத்தவிட்டுக்கதவு சிறிது திறந்திருப்பதாகத் தோன்றும். இடைவெளியின் பின்னே வர்ணச்சேலே யாடுவது தெரியும். கூர்ந்து கவனிப்பதற்குள் கதவு சிக்கெனச் சாத்தப்பட்டு விடும், ஒரு சமயம் அவன் பார்வையில் படும் பெண் உயர மானவள் போல் தோன்றுவாள்; வேருெரு வேளேயில் கொஞ் சம் பருமளுன காரிகையைக் கண்டதாக எண்ணிக்கொண்டு போவான். வயதானவள் மறைந்து கின்று எட்டிப்பார்ப்ப தாகத் தோன்றும். அழகியின் சாயலே அவன் கண்டுவிட்ட தாகக் கருதுவதும் உண்டு. இதனுலெல்லாம் அவன் குழப்பம் வளர்ந்தது, அங்கு எத்தனே பெண்கள் வசிக்கிருர்களோ என்று. இரவு நேரங் களில் அவனது குழம்பிய உள்ளம் பயங்கரக் கனவுகளுக்கு வித்திட்டு விடுவதும் சகஜமே. அடுத்த விட்டில் யாரோ * தம்பீ! ஏ. தம்பீ! என்று அடித்தொண்டையிலிருந்து குர லெழுப்பி அலறுவது கேட்கும். சிலசமயம் ஐயோ, நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/13&oldid=814718" இலிருந்து மீள்விக்கப்பட்டது