பக்கம்:சகுந்தலா.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 14 ” 'ಸ್ತ 657 நேரம் போகுதா வருதா? ாயிலுக்குப் போறதா னுச் சிக்கிரம் கிளம்பணுமே என்கிறது இங்கே யாருக்குமே தெரியலே : 3. சகுந்தலே இதோ வந்து விட்டாள் என்று சொல்லி, உம், போ போ. இன்னும் கோம் போக்கினல் ஏச்சு தான் கிடைக்கும் என்று, அந்தப் பெண்ணேக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக, அவசரப்படுத்தினுள். அவள் போக்கு சகுராமனுக்குக் கூட வருத்தமளித்தது. கால் மணி நேரம் கழித்து அவன் ஹோட்டலுக்குப் பேர்வ தற்காக முன் வாசல்படியில் கால் வைத்த போது தசன் அடுத்த விட்டு ஞானசம்பந்தரும், உலகுவும் ரோட்டில் இறங்கி நின்ருர்கள். ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகும் ஜட்காவில் ஏறுவதற்காகத்தான். . ரகுராமன் சம்பிரதாயமாகக் கும்பிட்டு வைத்தான். என்ன மறுபடியும் பிரயாணம் தானு ' என்து கேட்டான். ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக. இல்லை யில்லை. இந்தப் பெண்ண ஊருக்கு அனுப்பு வதற்காக டிக்கட் வாங்கிக் கொடுக்கப் போறேன். ரயிலிலே ஒரு ஆளேயும் பார்க்க வேண்டியிருக்கு என்ருர் அவர். ரகுவின் பார்வை உலகு பக்கம் சென்றது. பெரியவருக் குப் பின்னுல் ரகுவின் பார்வையில் நன்ருகத் தென்படும் வகையில், கின்ருள் அவள். அவனேயே கவனித்தபடி தான் நின்ருள். அவன் கண்கள் அவள் பக்கம் புரண்டு, அவன் முகத்தில் பதிந்து, அவளது கிறு விழிகளைக் கவ்விய போது, சோகம் குடியிருந்த அவள் வதனத்தில் சிறு மகிழ்வு புகுக் தது. அவளேயே கவனித்தால், அவள் அழுது விடுவானே என்ற ஐயம் எழவும் ரகுராமன் தன் பார்வையை மீட்டுக் கொள்ள முயன்ருன். r . -- சடக்கெனப் பின் வாங்கிய பார்வையைக் கவர்ந்திழுத் தது அவள் கையசைவு. அவள் ஏதோ சொல்ல விரும்புகிருன் போலும் என அவன் கவனிக்கவும், உலகுகரம் குவித்து வணக்கம் செய்து, தலையசைத்து அபிநயத்தின் மூலமே போய் வாறேன். என்று விடிை பெற்றுக் கொண்டிாள். அவனும் லேசாகத் தலேயசைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/149&oldid=814739" இலிருந்து மீள்விக்கப்பட்டது