பக்கம்:சகுந்தலா.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சகுந்தலா ரோட்டில் இறங்கிய ரகுராமனின் விழிகள் அடுத்த விட்டு வராத்தாவின் பக்கம் வளையமிடவும், அங்கு வாசல் அருகிலேயே நின்று கவனிக்கும் சகுந்தலேயைக் கண்டன. அவன் குறும்புத்தனமாகச் சிரிப்பது போல் தோன்றியது. மிடுக்காக கின்று வெற்றிப் பார்வை பார்ப்பது போலிருந் தது. - " உம். வண்டியிலே ஏறு, ஏன் கீழேயே நிற்கிறே : என்று அதட்டினும் பெரியவர். உலகு போயிட்டு வாறேன், அக்கா’ என்று சொல்லி விட்டு வண்டியில் ஏறி அமர்ந்தாள். அவரும் ஏறி உட்கார்ந்ததும் வண்டி நகர்ந்தது. வேகமாக ஒது மறைந்தது. - ரகுராமன் அசையாமல் கின்ருன். வீட்டு வாசல்படி வண்டையே நின்று கொண்டிருந்த சகுந்தலே, ஏன், அந்தச் சிங்காரச் சின்னப் பொண்ணு போய் விட்டது வருத்தமாக பிருக்குதாக்கும் ? என்று குரல் கொடுத்தாள். அவன் விவப்புற்மூன். அவளாகப் பேசுவதென்ருல், வியப் பு ம் மகிழ்வும் வராதா என்ன ! . - எனக்கு என்ன வருத்தம்?' என்று கேட்டான் அவன்.

உங்களே விட்டுப் பிரிந்து போய், மறந்து விடனுமே என்பதனுலே உலகு வாடித் தவித்து உருகிப் போகிருளே. உங்களுக்கு அப்படி ஒரு உணர்ச்சியும் இல்லேயாக்கும் ?” என்ற கேள்வியுடன் 'உகுங்' என்ருெரு மணிச் சிரிப்பையும் உருட்டி விட்டாள் அந்த ஒய்யாசி.

அவள் குரலின் விஷமம் அவனேத் தூண்டியது, அவள் அழகை நன்ருகப் பார் என்று பளிச்சிடும் பல புள்ளிகள் விரவிக் கிடக்கும் பொன் மேனிச் சிறுத்தையின் உடல் வண்ணத்தைப் பிரதிபலிக்கும் பகட்டான சேலே அணிந்திருந் தாள் அவள், கறும் வட்டப் புள்ளிகள் நிறைந்த அழுத்த மான ஆரஞ்சு வர்ணச் சேலே பொன் அவிர் மேனி ச் சகுந்தலேக்கு மிக எடுப்பாக இருந்தது. பட்டும் படாமலும் கலேயாக மையுண்டிருந்த கண்களின் குறுகுறுப்பும், ரோஜா முகை உதடுகளில் தவழ்ந்த சிரிப்பும் இந்தச் சிங்காரி சிறுத்தையாக மாறினும் மாறுவாள். மனித உருவினுள் பதுங்கிக் கிடக்கும் பண்புகளே யாரே அளவிட முடியும்!” என்ற எண்ணத்தை விதைத்தன அவன் உள்ளத்தில். எனினும் அவளது காந்த வனப்பை ரசித்து வியக்காம லிருக்க இயலவில்லே அவனுல், - -->

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/150&oldid=814741" இலிருந்து மீள்விக்கப்பட்டது