பக்கம்:சகுந்தலா.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா IG3 தான் என்ருள சகுந்தலே. கம்மிய குரல் அவள் தொண் டையை விட்டு வெளியே வர அஞ்சியது போல் ஒலித்தது. விடிஞ்சும் விடியாததுமாகவே ஆரம்பிச்சிட்டியா உன் வேலையை சரி சரி, எழுந்திருச்சு வேலையைப் பாரு, காப்பி போட்டிருந்தா வடிகட்டிக் கொண்டா. தோசை சுடு, அதுக்குள்ளே நான் குளித்து விடுவேன் என்று வழக்கம் போல் பேசினர் அவர், ※ ・ × ・ ",。 படுத்துக் கிடந்த சகுந்தலே விருட்டென்று எழுந்து உட் கார்ந்தாள். சும்மா பங்கொண்டையாக எடுத்துச் சொருகி யிருந்த அவளது கருங்கூந்தல் அவிழ்ந்து புரண்டது. கீர் தேங்கி நின்றதால் கலங்கித் தோன்றின கண்கள். கரகரப் புத் தட்டியது அவள் குரலில். மனுே வேதனேயுடன் அவள் பேசியது, வெறி பிடித்தவள் புலம்பிய மாதிரித் தான். தோன்றியது. "நான் சொல்லிப் போட்டேன். இந்த வீட்டிலே நான் தெருவோடு போற நாய்களுக்கெல்லாம் பொங்கி வடிச்சுப் போடுற வேலைக்காரியாக இருக்க முடியாது. வீடு பெருக்கி கூட்டி சமையல் வேலை செய்து-ஆமா, அதெல்லாம் பார்க்க தனியா ஆளு ஏற்பாடு செய்திருங்க. இனிமே என்னுலே முடியாது." - திடீரென்று அவள் அப்படிப் பேசியதும் ஒரு கணம் அசந்து போளுர் அவர். பிறகு உனக்கு இப்ப என்ன கொள்ளே வந்துட்டது? என்று உறுமினர். எனக்கு ஒரு கொள்ளேயும் வாலே. இந்த வீட்டுக்குத் தான் சனி வந்திருக்கு என்று சொல்லி வேகமாக எழுந்து அடுப்படிக்குள் சரண் புகுந்தாள் அவள். ஞானசம்பந்தரின் பின்னலேயே வந்து பதுங்கி நின்ற செல்வநாயகி கத்தினுள்: கேட்டியளா ! என்னேத் தான் அவ அப்படிச் சொல்லுதா. கான் சனியாம். இந்தச் சிதேவியக்கர் சொல்லி விட்டா. கான் சனியனும் !’ - நீட்டி முழக்கத் தொடங்கிய அவள் கூச்சலை அமுக்கும் படியாகக் கூச்சலி ட் டார். அவர். "நீ யேன் இப்படிக் கத்துதே அவ சொன்னுல் சொல்லி விட்டுப் போளு' அவரைப் பேச விடவில்லே இன்பக்கிழத்தி. . நீங்க எப்பவுமே இப்படித் தான். அது தான் கான் இங்கே வரவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/155&oldid=814746" இலிருந்து மீள்விக்கப்பட்டது