பக்கம்:சகுந்தலா.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 62 சகுந்தலா களாமே- அது மாதிரிச் செய்து உனக்குப் புத்தி கற்பிக் கனும், பெரிய நாடகம் ஆடித்தீர்த்துவிட்டாளே பாதகத் தி' என்று புலம்பினுர் அவர். 'நீங்க நினேக்கிறபடி ஒண்ணுமே யில்லே, என்று தன் கட்சியை எடுத்துரைக்க முன்வந்தாள் சகுந்தலே.

  • உங்களிடம் தான் கோளாறுகள் இருக்கு. உங்கள் தவறுகளும் சந்தேகங்களும் தான் மற்றவர்களேயும் பாபி கனாகவும் பழிகாசர்களாகவும் கினேக்கத் துண்டுகிறது’ காமாலேக்கண்தனம் தான் என்று .ெ த ர ட ங் கி னு ன் த குராமன்.

ஏப் கீ பேசாதே! என்று குடிவெறியன் போல் கத்தினுர் கோப வெறியோடிருந்த பெரியவர். 'நீர் கத்தும்; குதியும்; கூப்பாடு போடும். கவலையில்லே தான் சொல்ல வேண்டியதைச் சொல்லியே தீர்ப்பேன். நீர் முதல்ாக அயோக்கியர் என்பது என் அபிப்பிராயம். பெரிய மனிதன் போல் பாவலாப் பண்ணுகிற பெர்வழி நீர், அறிவும் அனுபவமும் மிகுந்தவர் மாதிரிப் பம்மாத்துப் பண்ணிப் பெயர் பெற ஆசைப்படுகிற அல்பன் தான். உமது எழுத்துக்களேப் படித்துப் பார்த்தேனே, அன்றே அது புரிந்தது. ஏன், அ. து க் கு முன்னுடியே-பின்புறம் தோட்டத்தில் வேலி கட்ட வேணும் என்று பேசினரே, அந்த முதல் சந்திப்பின் போதே-புரிந்தது. அந்தக் கருத்து ஒவ்வொரு சந்திப்பின் போதும் வளர்ந்து வந்தது. இன்று அது மிக உறுதிப்பட்டு விட்டது. உமது மனைவியை மிருகத் தனமாக அடித்துக் கொல்கிறீரே, உமது மனைவி மீது அகி யாயமாகச் சந்தேகம் கொள்கிறீரே, நீர் ரொம்ப ரொக் கமாக-கேர்மை தவருத முறையில்-வாழ முயன்றீரா? கிடையாது. இவ்வளவு இளமையான, அழகான, ம்னேவி இருந்தும் கூட நீர் குரங்கு மாதிரி-சாக்கடைப் பன்றி மாதிரி-உள்ள ஒரு பொம்ப&ளயின் பின் ஒடித் திரிகி நீரே. ஆசை நாயகியாம். அவளோடு தனி வாழ்க்கையாம்! வெட்க மில்ல்ே செயலில் ஒரு பாபமும் புரிந்தறியாத இந்த அபலேயை விபசாரி, தேவடியாள் என்றெல்லாம் பழித்து தண்டனே வேறு கொடுக்க முன் வந்து விட்டீரே. நியாயம் என்ருல், நேர்மையான தீர்ப்பு என்ருல், உம்மை யல்லவா கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கழுதை ஊர்வலம் அனுப்பு. வேண்டும்!” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/164&oldid=814756" இலிருந்து மீள்விக்கப்பட்டது