பக்கம்:சகுந்தலா.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தல: 169 'உம், என்னுலே உங்களுக்கும் கெட்ட பெயர். மனக் கஷ்டம். போதாதற்கு இந்த நாய்க்கடி, நீங்கள் ஏன் இன்னும் என்னே அன்போடு உபசரிக்கிறீர்கள்? அவள் அனல் மூச்சுயிர்த்தாள். ரகுராமன் பேசாமல் கின்ருன். அவர்களிடையே மெளனம் நீடித்தது. நேரம் ஊர்ந்தது. உம், எழுந்திரு. காப்பி ஆதிப் போகும்’ என்று, அவள் கையைப் பற்றித் துரக்க முயன் ருன் ரகு. அவள் பதறி எழுந்தான். பிறகு சிரித்தாள். .# * . முகம் கழுவிக் காப்பி சாப்பிட்ட பிறகு அவள் கேட் டாள்: இனி நான் என்ன செய்வது? அவளது எதிர்காலத் தைப் பற்றிய கேள்வி தான் இது. . "அது உன் மனுேபலத்தைப் பொறுத்தது என் மூன் அவன். "அப்படி யென்ருல்? 'வ ழ் க் ைக பல மேடு பள்ளங்கள் கிறைந்தது. மேட்டில் ஏறி கிற்பவர்கள் அங்கேயே கிற்பதில்லே. பன்னத் தில் தள்ளுண்டவர்கள் அந்த இடத்திலேயே கிடப்பதில்லே. மேட்டில் இருப்பவர்கள் இறங்க வேண்டியதும், கீழிருப் பவர்கள் மேல் நோக்கி முன்னேறுவதும் சக்தர்ப்பங்களுக் கேற்ப நிகழும் காரியங்கள் தான்.' என்ன, பிரசங்கம் பண்ண ஆரம்பித்து விட்டீர்களே!’ என்று கூறி லேசாகச் சிரித்தாள் அவள் அவனும் இகைத் தான். 'பிரசங்கம் இல்லை, சகுந்தலா, வாழ்ககையைப் பற்றிய உண்மை. வாழ்க்கை ஒரு நெடுங்கதை. அது ஒரு சில அத்தி யாயங்களுடனுே, ஒன்றிரண்டு பாகங்களிலோ முடிக் து விடுவதில்லை! . "அது எப்பவும் முடியட்டும். என் வாழ்க்கையைப் பற்றி...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/171&oldid=814764" இலிருந்து மீள்விக்கப்பட்டது