பக்கம்:சகுந்தலா.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா Í 70 "அவசரப்படாதே, சகு!’ என்ருன் அவன். தன்னே அறியாமலே உணர்ச்சிப் பெருக்கில் உ ரி ைம .ே ய | டு உதிர்ந்து விட்டசொல் அது. அவள் உ ள்ளம் நெகிழ்ந்தது. உடல் புள கித முற்றது. கண்கள் மகிழ்வொளியால் மலர்க் தன, இதழ்கள் சிரிப்புச் சிங் தின. அவள் முகமாற்றம் அவனுக்குத் தைரியமளித்தது. ஆகவே, வாழ்க்கையிலே இயல்புக்கு ஒத்து வராத, வசதி செய்யாத, சம்பவங்கள் நிகழ்ந்து விடுமானல் அத்துடன் வாழ்க்கையே முடிந்து விட்டது போல் குமைந்து குவிவது கூடத் தற்கொலேக்குச் சமம்தான். அந்த இடத்திலே கோடு கிழித்து விட்டு, புதிய பாகத்தைத் தொடங்க வேண்டும். உன் வாழ்க்கை ஏட்டிலும் புதுக்கணக்கு தொடங்கி விடலாம் - உனக்கு மனத் தெம்பு இருக்கு மானுல்!" - அவளுக்குப் புரியாமல் இல்லே. எனினும் என்ன சொல்லுகிறீர்கள்? புரியும்படியாகத் தான் சொல்லுங் களேன்!” என்ருள். - அவன் அவள் முகத்தைக் கவனித்தான். கிரிப்பு வந்தது, புரிகிறது சகு புரிகிறது. உனக்கும் புரிந்து விட்டது. உன் போக்கு எனக்கும் புரிகிறது" என்று சொல்லிச் சிரித்தான். "நான் என்ன சொல்கிறேன் என்ருல், சகு, நீ இனி மேல் எனது அடுத்த விட்டுக்காரியாக இருக்க வேண்டிய தில்லே. அந்த வீட்டில் உனக்கு இடமில் லே என்ருகி விட்டது. அடைத்த விடு அடைத்தே கிடக்கட்டும்: எனது வீட்டின் கதவுகள் உனக்காக எப்பொழுதும் திறந்தே கிடக்கின்றன. புரிகிறதா?” அவள் உள்ளப் பரப்பிலே இவ் வார்த்தைகள் அதிர்ச்சி எழுப்பும் கல் போல விழவில்லே, மகிழ்ச்சி அலேகளே எழுப் பும் தென்றலாகத் தான் வருடின. அவள் தலே குனிந்து கின்ருள். யோசிக்க வேண்டிய விஷயம் தானே! • 'இது தவறுகுமே, பரபமே என்றெல்லாம் எண்ணு கிருயா? காலம் மாறி விட்டது. சகு, சம்பிரதாயங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/172&oldid=814765" இலிருந்து மீள்விக்கப்பட்டது