பக்கம்:சகுந்தலா.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சகுந்தலா தம் அவன் முகத்தையே பார்த்தார். உம். சொல்லுங்க!” என்று தலேயசைத்தான் அவன். அதனுலே நடுவிலே ஒரு வேலி போடுவது நல்லது ஏன்று தோன்றுகிறது. பகலிலே, எந்த நேரத்திலும் இக் தப் பக்கத்திலே எங்க விட்டில் உளளவங்க பழகுவு தற்கும் செளகரியமாக யிருக்கும். பன ஒலேயைக் கொண்டோ, தென்னுேலேத் தட்டிகளே வைத்தோ உயரமாக மறைவா யிருக்கும்படி வேலி அடைக்கலாம்னு யோசஃன. நீங்க என்ன சொல்றிங்க ? உங்கள் யோசன் ! அதை உங்கள் இஷ்டம் போல நீங்கள் செய்வதற்க்கு என்னுடைய அபிப்பிராயம் எதறகு g” என்ருன் ரகுராமன். அம்மாளு சொல்லிக் கொடுத்த அழ. கான யோசனே போலிருக்கு ' என்று முனங்கியது அவன் மனம். செய்வதைப் பற்றித் தடை ஒன்று மில்லை, மிஸ்டர் குராமன் அது பொது இடம். நமது பொது நன்மையை உத்தேசித்துச் செய்யப் போகிற காரியம். அதுக்கு உங்கள் சம்மதமும் இருந்தால் நல்லது தானே ! உண்மையில் அவர் தனது சம்மதத்தைப் பற்றிக் கவலேப் படவில்லை; வேறு முக்கிய விஷயத்திற்காக அடிப் போடுகிருர் என்பது அவனுக்கா தெரியாது ! ஆகவே பேஷாச் செய்யுங்கள் ! என்னிடம் கேட்பான்ேன் ?” என்ருன். பொது இடம், பொது வேலி என்பதேைல செலவிலே பாதியை நீங்கள் ஏற்றுக் கொள்ளணும். அதுக்காகக் தான்!" இதையே எதிர்பார்த்த ரகுராமன் அழுத்தமாக அறி வித்தான் அதுதான் முடியாது என்று. முடியாதா ? ஏன் ? என்று உறுமினர் அவர். உங்கள் நன்மையை உத்தேசித்து......' எனது நன்மையா? இது பொது விஷயம் என்று. சொல்கிறேன். நீங்கள் வந்து......” பொது விஷயமுமாச்சு. பொரிச்ச குழம்புமாச்சு 1 போங்கய்யா : மகாப் பொது நன்மை-எனக்குத் தெரியா தாக்கும் ! உங்கள் சொந்தச் செளகரியங்களே-உங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/28&oldid=814777" இலிருந்து மீள்விக்கப்பட்டது