பக்கம்:சகுந்தலா.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 27 விட்டிலிருப்பவர்களின் நலன்களே-உத்தேசித்து நீங்களே திட்டமிட்டுச் செய்கிற காரியம். இதுக்கு நான் ஏன் உதவ வேண்டும் ?’ என்று அமைதியுடன் ஆணித்தரமாய்ச் சொன்னுன் அவன், இதனுலே உங்களுக்கும் செளகரியம் என்பதை நீங்க மறந்து விடப் படாது.” சும்மா கிடந்தாலும் எனக்கு ரொம்பச் செளகரியம் தான் சுவரே கட்டி விட்டாலும் ஒன்று தான். எதைப் பற்றியும் எனக்கு அக்கறை கிடையாது. இத்தனே நாள் இல்லாத வசதிக் குறைச்சலோ, அதிக நன்மையோ வேலி கட்டுவதேைல மட்டும் என்ன வந்து விடப் போகிறது ? ரகுராமன், நீங்கள் பேசுவது நல்லாயில்லே ' என்ருச் ஞானசம்பந்தம். நீங்கள் இதுவரை பேசியதற்கும் திடீரென்று சொந்த விவகாரத்திலே பல்டி யடிப்பதற்கும் பொருத்தமும் நல்ல பண்பும் இருந்தால் சரிதான் என்ற ரகுராமனின் குரலில் கிண்டல் மிளிர்ந்தது. -

  • வார்த்தைகளே நிறுத்துப் பேசனும் நண்பரே. சொல் லுக்கு சக்தி அதிகம் என்று சொன்னு ர் பெரியவர்.

சந்தோஷம், ஆல்ை நீங்கள் அதை மதிப்பதில்க்ல போலிருக்கு. சும்மா அளந்து கொட்டுவது தான் உங்க் ளுக்குப் பிடிக்குமென்று தெரியுது. அது எப்படியும் போகட்டும். வேலி விஷயத்திலே கண்டிப்பென்ருல் கண் டிப்புதான். எனக்கு வேலி போட்டுத்தான் ஆகணும் என்ற அவசியமே கிடையாது. இத்தனே நாள் கிடந்தது போலவே திறந்த வெளியாய் கிடந்துவிட்டுப் போகட்டுமே கூடாது. வேலி கட்டித்தான் தீரணு மென்ருல் நீங்கள் உங்கள் சொந்தப் பொறுப்பிலேயே கட்டிக் கொள்ளுங்கள். கான் காலணுக் காசு தரமுடியாது என்று கூறிவிட்டு வேமாகக வெளியே நடந்தான் அவன். 多

  • மிஸ்டர், மிஸ்டர்!’ என்று கூப்பிட்டார் சம்பந்தம். ரகுராமன் திரும்பிப் பார்க்கவே யில்லே. உம், என்ன இவன் இப்படி யிருக்கிருன்!’ என்று கிகினத்தார் அவர்.

அவள் யோசனேதான் இது. இதுக்காக நான் ஏன் வீண் செலவு செய்யனும் ? என்று புழுங்கினுன் ரகுராமன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/29&oldid=814779" இலிருந்து மீள்விக்கப்பட்டது