பக்கம்:சகுந்தலா.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-46 சகுந்தலா சரிதான். வழக்கமான குடும்பக் கலகம்' என்று ஒதுக்கி விடவும் மனம் வரவில்லே அவனுக்கு. எவ்வாறு ೧೩೩ மறிவது என்ற ஏக்கத்தைத் தீர்த்து வைக்க வந்த நபர் போல் வந்தாள் விடு கூட்டும் கிழவி. சாதாரணமாக ரகுராமனே தன் வீட்டைப் பெருக்கிச் சுத்தமாக வைத்துக் கொள்வான். வாரத்தில் ஒருநாள் நன்றுக மெழுகி, வாசல் தெளிப்பதற்காக அந்தக் கிழவியை ஏற்பாடு செய்திருந்தான். அவள் புலம்பியதாலும், 'உங்க அப்ப அம்மா காலத்திலே யிருந்து கான் இங்கே வருஷக் கணக்காக வேலே செய்து வாறேன். நீ வேண்டாம்கிறியே! கியே செய்து போடலாம். முடியாது என்கலே, ஆனால் நீ காசு மிச்சம் புடிக்கவா இப்படிச்செய்யப் போறே? எனக்குக் கொடுக்கிற அல்பக் காசை மிச்சம் பிடிக்கிறதனலே உனக்கு என்ன ஆகப்போகுது? நீ கொடுக்கிற அந்த ஒரு ரூபாகூட எனக்கு எவ்வளவோ உதவியாக இருக்குமே என்று அழாத குறையாகக் கெஞ்சியதாலும் அவள் இஷ்டம் போலவே தினம் வந்து பெருக்கி விட்டுப் போகும்படி விட்டு விட்டான். அவளுக்கு மாதச் சம்பளம் மூன்று ரூபாய். ஆனால் அவள் மாதம் பூசாவும் ஒழுங்காக வருவதில்லே. இரண்டு கான், மூன்று நாட்களுக்கு ஒருமுறை தான் வந்து போவாள். கேந்து ஏன் வரவில்லே என்று கேட்டால், நான் தான் வந்து எட்டிப் பார்த்தேனே; நீ இல்லே. வீடு பூட்டிக் கிடந்துதே' என்பாள். அல்லது நீ ரொம்ப நேரம் துரங்கி விட்டே போலிருக்கு என்று சொல்வாள், ஏதோ ஒரு காரணம்: வரும் நேரத்துக்கும் கணக்குக் கிடையாது. அதிகாலேயில் வருவாள்; பத்து மணி பதினுேரு மணிக்குக் கூட வருவாள். சில நாள் சாயங்காலம் நாலு மணிக்கு வந்து பெருக்கி விட்டுப் போவாள். - அவள் வேலேக்காகக்கூலியில்லே இது. சும்மா தர்மம் மாதிரித் தான்’ என்று முடிவு செய்திருந்ததால், அவன் அவனேக் கண்டித்துக்கேட்பதுமில்லே, வந்து வேலே செய்கிற வரைக்கும் சரிதான்: செய்யாவிட்டாலும் சரிதான்' என்ற தாாள மனுேபாவம் அவனுக்கிருந்தது. அவன் எதிலுமே அப்படித்தான். வாழ்வில்ே பிடிப்பில்லாமல், பற்றுதல் இல்லாமல், ஏதோ பொழுது கழிந்தால் சரி என்ற தோர ணேயில் காளோட்டி வந்தான். - அவன் போக்கு சில சமயம் அந்த வேலைக்காரக் கிழவிக் குக் கூடப் பிடிக்காது. அப்பொழுதெல்லாம் அவளாகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/48&oldid=814800" இலிருந்து மீள்விக்கப்பட்டது