பக்கம்:சகுந்தலா.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் هي غم -o

  1. .

வேடிக்கை மனிதர்கள் கிறைந்த இந்த உலகத்தில் சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக் கின்றன. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ரகம் ரகமான மனிதர்களும் ரசமான நிகழ்ச்சிகளும் குறுக்கிடக் கூடும். சாதாரண மனிதர்களின் சராசரி வாழ்விலே கூட விசேஜ மான உணர்ச்சிக் குழப்பங்களும் அசாதாரணமான சம்ப வங்களும் அபூர்வமாக கிகழ்ந்து விடுவதும் சாத்தியம் தான். சமுதாயத்தின் மத்தியில் வாழ்கிற ஒருவன் ஒதுங்கி வாழ ஆசைப்பட்டாலும் கூட சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் அவனே ஆட்டி வைக்கின்றன. பிறரது சுகதுக்கங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தனது காரியங்களே மட்டுமே கவனித்துக் கொண்டு தன் இஷ்டம் போல் வாழ விரும்பு கிறவன், முதலில் தனது இதயத்தைக் கல்லாக்கி, மனித உணர்ச்சிகளுக்குச் சமாதி கட்டி விட்டு, சுத்த சுயநலம் என்பதைத் தான் வழிபடும் தேவதையாகக் கொண்டுவிட வேண்டும். ரகுராமன் என்பவன் வேடிக்கை உலகத்தின் வித்தை களேச் சும்மா விளேயாட்டாகப் பார்த்துப் பொழுது போக்கி வாழலாம் என்று எண்ணியிருந்தான். ஆனுல் சாதாரண நிகழ்ச்சிகள் கூட அவனே அலேக்கழித்தன, என்ன செய்வ தென்று தெரியாமல் திணறிய அவனுக்காகச் சம்பவங்கள் தாமாகவே இயங்கி வழி வகுத்துக் கொடுத்தன. அவ்விதம் நிகழ்வதற்கு ஏதுவாக இருந்தவர்களில் முக்கியமானவர் ஞானசம்பந்தர். - அவர் ரசமான ஆசாமி. நாடகமே உலகம் என்கிற வார்த்தைகளை மெய்ப்பிப்பதற்காகவே வாழ்கிற சில விசித் திரப்பிறவிகள் மனித இனத்தில் இல்லாமல் போகவில்லே. அத்தகைய ஒருவரின் பண்பாடும் செயல்களும் தான் தனி யனாக வாழ ஆசைப்பட்ட சகுராமனின் வாழ்க்கையை மாற்றி அமைக்க உதவின. அவர் தமது பண்பாட்டின்படி செயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/5&oldid=814802" இலிருந்து மீள்விக்கப்பட்டது