பக்கம்:சகுந்தலா.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா § { நல்லவர் மாதிரிங்கிறது தப்பு, ரொம்ப நல்லவரே தான்னு சொல்லனும். நீ எங்கே சொல்லி யிருக்கப் போறே ! நான் தான் சொன்னேனே, எனக்கு உன்னே மாதிரிப் பேசத் தெரியாது. அவ கேட்டதும், ஆமா, நல்ல பிள்ளை பாண்டான் தான். ஆனுல் வேலே பார்க்க மாட்டேன், கல் யாணம் பண்ணப் போறதில்லே யின்னெல்லாம் சொல்லிக் கிட்டிருக்கிருன்...... ..o. X இதை யெல்லாம் சொல்லிப் போட்டியா சரியாப் போச்சு போ !” . - பின்னே உன்னேப் பத்தி வேறே என்னத்தைச் சொல்றது ? உம். அப்புறம் அவள் ஒண்ணுமே சொல்லலியாக்கும்?" சொல்லாமே இருப்பாளா, ஏனப்படி இருக்கிருர்ன்னு கேட்டாள். முன்னே இருந்தவங்க தேடி வச்ச சொத்து அழியனும் பாரு, அதுக்குத் தான் னு சொன்னேன். இல்லே பாட்டி, அவர் நோக்கம் என்னவோ ; அது பிறத்தியாருக்கு எப்படித் தெரியும்னு சொன்னுள். பரவால்லியே : ஊங், அப்புறம் ? 'உன் பேரு, ஊரு, படிப்பு, சொத்து சுகம் எல்லாத்தை யும் பற்றிக் கேட்டாள்.' எல்லாவற்றையும் நீ சொல்லி விட்டியாக்கும் இதெல் லாம் என்ன விசாரனே அவளுக்கு என் பேரிலே ரொம்ப அக்கறை கொண்டிருக்கிறவ மாதிரித்தான் என்று முண முனத்தான் அவன். பிறகு சரி, அவளே அடிச்சது யாரு?" என்று கேட்டான். வேறே யாரு அடிப்பா? தாலி கட்டின புருஷன் தான் என்று சொல்லிவிட்டு துடைப்பத்திற்கு வேலே கொடுத்தாள் கிழவி. - புருஷன? அவள் புருஷன் தான அவரு! என்று முனங்கினவன் ஆமா, அவர் ஏன் அவளேப் பேயறை அறைந்தாராம்?’ என்று கேட்டான். - அது ஒரு கதை. எல்லாம் கதை கதையாகத் தானிருக் கம்மா இந்த் காலத்திலே ' என்ருள் கிழவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/53&oldid=814806" இலிருந்து மீள்விக்கப்பட்டது