பக்கம்:சகுந்தலா.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 55、 கட்டுப்பாடு பண்ணி வைக்கிறதையும் சகிக்க முடியாமே அவள் விட்டை விட்டே ஒடிப்போயிட்டாளாம். சொந்தக் காரன் ஒருத்தன் கூடத்தான். அவள் எங்கே போனு' என்ன ஆளுள் என்கிறதே இதுவரை தெரியலியாம்.' பேஷ், ரொம்ப ரசமான செய்தியாக இருக்குதே!’ என்ருன் ரகுராமன். அந்தப் பாடம் இந்தப் பெண் தலே. யிலே வந்து விடிந்த தாக்கும் ? ஆமா. வாசல் பக்கம் எட்டிப்பார்க்கப்படாது; கம்மா சும்மா பின் தோட்டத்திலே நிற்கப்படாது. தெருவுக்கு வரக் கூடாது ; திருவிழாவுக்குப் போகக் கூடாது. பவுடர் பூசக் கூடாது; அதிகமாக அலங்காரம் செய்யக் கூடாது. இப்படி எடுத்ததெற் கெல்லாம் கண்டிச்சுக்கிட்டே யிருந்தா, ஒரு பெண் மனசு என்ன பாடு படும் ? அவள் என்ன கிழ்வியா ? எல்லாம் அனுபவிச்சு அலுத்துப் போனவளா? சின்னஞ்சிறு வயசு. நாலு பேரைப்போல தானும் இருக்க னும்கிற ஆசை இல்லாமல போகும் அதை வெளியே சொல்ல முடியாமல் நெஞ்சு துடிக்கும். அந்த ஆசையினுலே அவள் நேற்று தெப்பத் திருவிழா பார்க்கப் போயிருக்கிரு. அதிலே என்ன தப்பு ? பெரியம்மாதானே போயிட்டு வன்ன்னு சொன்னு அப்படிப் போனதுக்காக அவ&ளப் பிசாசு அறையிற மாதிரி அறைஞ்சிருக்கு அந்த ஆளு. இந்த அநியாயம் எங்காவது உண்டா ? என்று மூக்கின் மீது விரல் வைத்தாள் கிழவி. அடுத்த வீட்டுக்காரியிடம் ரகுராமனுக்குள்ள அனுதாபம் அதிகரித்தது. அவனுக்கு ஒரு சந்தேகமும் எழுந்தது. அந்த விட்டிலே யாரோ ஒரு பையன் இருக்கிற மாதிரித். தோனுதே. நேற்றுச் சாயங்காலம் தற்செயலாய் கண் ளிைலே பட்டான். அவன் யாரு தெரியுமா, பாட்டி : என்று. விசாரித்தான்.

  • யாரு ? சிவப்பா, ஒல்லியா, கொஞ்சம் கூன் விழுந்த மாதிரிக் குனிஞ்சு நடந்து போவானே, பதினேழு பதி னெட்டு வயசிருக்கும். இல்லேயா ? என்று கேட்டாள் அவள். ,

ஆமாம். அவன் 5ರ್ಣ, அவன் யாரு ? அவர் மகன் தான். சகுந்தலே யிருக்கிருளே அவளுக்கு மூத்த படியா மகன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/57&oldid=814810" இலிருந்து மீள்விக்கப்பட்டது