பக்கம்:சகுந்தலா.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச கு ந் த லா — ? — 'குராமனுக்கு யோசித்து யோசித்து மூளையைக் குழப் பிக் கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. என்ருலும் சில தினங்களாக அவன் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தான். மற்றப் பிரச் னேகள் எல்லாம் தாமாகவே பதுங்கிவிட்டன. அடுத்த வீட்டில் வந்து குடியேறியிருப்பது யாராக இருக்க முடியும் என்பதுதான் அவன் மனதில் உறுத்திக் கொண்டிருந்த முக்கியப் பிரச்சீன. அங்கு ஒரு பெண் புதி தாக வந்திறங்கினுள் என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரி யும். ஆனல் அவள் மட்டும் தான் குடியிருக்கிருளா? சிலசமயம் அவனுக்கு அப்படித்தான் தோன்றும். முடி யாது, ஒரே ஒருத்தி மட்டும் அந்த வீட்டில் தனியாக இருக்க முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிருக்க வேண்டும். பெண்கள் இருவரா, மூவரா? அல்லது அவள் மட்டும் தான?' ரகுராமனுல் உறுதியாகத் தீர்மானிக்க முடியவில்லே. எத்தனே பேர் வேண்டுமானுலும் இருந்து விட்டுப் போகட்டும்! இவர்கள் ஏன் இந்த வீட்டைத் தேடிப்பிடித்து வரவேண்டும்? ஊரில் வேறு வீடுகள் இல்லாமலச போயின!” என்று சீறும் அவன் மனம். உடனேயே சிரிப்பு எழும். நான் இங்கு இருப்பதனுல் பக்கத்து வீட்டிலே யாருமே குடியிருக்கப்படாது என்று நான் எப்படிச் சட்டம் செய்ய முடியும் இவ்விதம் ஆசைப் படுகிறவர்கள் அத்துவானக் காட்டிலே போய் டேராப்போட வேண்டியதுதான் ' என்று கினேத்துக்கொள்வான் அவன். அட, குடிவந்ததுதான் வந்தார்களே! எல்லோரையும் போல் வீட்டைத் திறந்து வைத்து, கலகலப்பாக வாழக் கூடாதோ? முன் வாசல் கதவு-கம்பிக் கதவல்ல; பெரிய கதவே தான்-சதா அடைத்தே கிடக்கிறது. யாராவது வெளியே தலேகாட்டுவார்களா என்று பார்த்தால், ஊம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/7&oldid=814824" இலிருந்து மீள்விக்கப்பட்டது