பக்கம்:சகுந்தலா.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா ァ ஆலயே கவனித்துக் கொண்டிருந்தான். பொதுவாக அவனு டைய பொழுதுபோக்கே அதுதான். ரகுராமனின் வேலே கூட அதுவே அவனுக்கு விசேஷ உத்தியோகம் எதுவுமே கிடை யாது. சுகமாக வாழ்வதற்குப் போதிய பணமிருந்தது. எவ்வளவு பணமிருந்தால் தானென்ன உட்கார் க் திருந்து சாப்பிட்டால் அது எத்தனே காரேக்கு வரும்? கைப் பணம் காலியான பிறகு என்ன செய்யப்போகிருப்? அதைப் பற்றி யோசித்தாயா!' என்று அவன் கலத்தில் அக்கறை யுள்ளவர்கள் சொல்வது உண்டு, அதைப் பற்றி இன்றே கவலைப்பட வேண்டுமா என்ன? அப்பொழுது பார்த்துக் கொள்ளலாமே!’ என்று ஒதுக்கி விடும் குணம்தான் அவனிடமிருந்தது. வாழ்க்கையில் கவலேயே இருக்கக்கூடாது; ஜாலியாக வாழவேண்டும்: என்பதுதான் அவனுடைய லட்சியம். தினந்தோறும் எவ்: வளவு நேரம் ஊர் சுற்ற முடியும்; சினிமா பார்ப்பது, வம்ப அாப்பது போன்ற காரியங்களேச் செய்ய இயலும்? பாக்கி உள்ள நேரத்தை ஒட்டியடைக்கப் புத்தகங்கள் படிப்பது நல்லவழி என்று பட்டது அவனுக்கு. பணக்கார விட்டுப் பிள்ளேகள் ஜம்பத்துக்குப் புத்தகங் களே வாங்கி அடுக்குவார்கள். அலமாரிக்கு அழகு: கைக்கு பூஷணம்' என்று சில புத்தக வியாபாரிகள் விளம்பரம் செய்கிருர்களே, அது செல்வர்களின் விட்டுக்குப் பொருந் தும். சூழ்கிலே அலங்காரமாகவும், கைக்குப் பூஷணமாகவும் பயன்படும் பாக்கியம் ரகுராமன் வாங்கும் புத்தகங்களுக் கும் கிடைக்கும். படிப்பதாக பாவலாப் பண்ணி பராக்குப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் பெரும்பாலும் அவன் அனுஷ்டிக்கும் முறை. அதற்கு ஏற்ற இடமாக இருந்தது. ஜன்னலோரம், அவன் தங்கியிருந்த விட்டை அடுத்து ஒருவீடு இருந்தது. அது ரொம்ப காலம் காலியாகவே கிடந்தது. யாராவது வாடகைக்குக் கேட்டாலும் சொந்தக்காரர்கள் வந்து வசிக் கப் போகிரு.ர்கள். இந்த வீடு வாடகைக்குக் கிடைக்காது ' என்று சொல்லிவந்தார்கள். அங்கு தங்குவதற்கு எந்த ச் சொந்தக்காரரும் வரவுமில்லே. இரண்டு விடுகள் சேர்ந்த தனிப்பெரும் கட்டிடத்தில் வலதுபுறத்து வீடு ரகுராமனின் தந்தைக்குச் சொந்தம் இடதுபக்கத்துவிடு, அவருடைய சக்ோதரரின் உடமையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/9&oldid=814846" இலிருந்து மீள்விக்கப்பட்டது