பக்கம்:சகுந்தலா.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுக்தலா Sof கும் போது அவனது உள்ளத்தின் நிலையைப் பற்றி, என்ன எண்ணுவது என்றே எனக்குப் புரியவில்லே என்று கெஞ் சொடு கிளத்தினுன் அந்த ரசிக சிகாமணி, 'நீ ஏனப்பா எதையாவது எண்ண வேண்டும்? அவரேப் பற்றித் தான். சகுந்தலே கல்யாணமானவள். அவள் க்ன வன் வயது அதிகமானவராக. விசித் திர்ப் பண்பினராக, அவளேக் கஷ்டப்படுத்துகிறவராக இருந்தால் உனக்கென்ன: அவள் வாழ்க்கை அவ்வளவு தான் என்று நீ ஒதுங்கிப்போப் உன் பாட்டைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தானே? அவள் அடுத்த வீட்டில் வந்து குடியேருமலிருந்தால் அவளேப் பற்றி நீ ஏதாவது அறிந்த கொண்டிருக்க முடியுமா? இப்பவும் அது மாதிரி கினைத்துக் கொள்ளேன்' என்று உப தேசித்தது அவன் அந்தராத்மா. அது எப்படி முடியும் பிரதர்! அவள் அடுத்த விட்டுக் காரியாக இருப்பதால் தானே அவ&ளப் பற்றி எண்ண் வேண்டியிருக்கிறது. பார்க்கவேனும் என்ற ஆசை எழு கிறது. பார்த்தால் அவள் ஏன் பேசுவதில்லை என்ற குறு குறுப்பு பிறக்கிறது: சிங்காரப் பொண்ணு உலகு இருக் கிறதே, அது அநாவசியமாக ரொம்ப பிரியாகப் பேசிச் சிரித்து விளையாடுகிறது. அதோடு பேசுகிற போதெல் லாம், சகுத்தலே இப்படிப் பேசிச் சிரித்தால் எவ்வளவு இன் பமாக யிருக்கும் என்ற ஆசை உண்டாகிறது: உண்டாகத் தான் செய்கிறது அப்பனே! அதை அடக்க முடியலிபே' என்று புலம்பியது மனக்குறளி, ரகுராமன் முகத்திலே சிரிப்பு தோன்றி மறைந்தது, "எனது நினைவுகளே மற்றவர்கள் அறிந்தால் என்னேக் காலிப் பயல் என்று தான் சொல்லுவார்கள்' என்று சுயவிமர் சனம் செய்து கொண்டான் அவன். ரகுராமன் அன்று முதன் முதலாக முடித்த காரியம் மாடி அறையைச் சரிப்படுத்தி சுத்தமாக வைத்ததுதான். சுவர்களில் அழகான படங்கள் சிலவற்றை மாட்டி வைத் தான். ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கிறவர்கள் -வேறு யார்! அடுத்த வீட்டு அழகி தான்!-அறை கிடக்கிற அலங் கோலத்தைக் கண்டு தன்னேப் பற்றி மோசமான அபிப்பிரா யம் கொண்டுவிடக் கூடாதே என்ற நல்லெண்ணத்துடன் தான் அவன் அவ்விதம் செய்தான். அதாவது தனது செய லுக்கு அதுதான் காரணம் என்று தன் மனசைத் தானே ஏய்த்துக் கொள்ள விரும்பினுன் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/93&oldid=814850" இலிருந்து மீள்விக்கப்பட்டது