பக்கம்:சகுந்தலா.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா يقي "அதை அப்புறம் செய்யலாம், இப்ப நீங்கள் ஏன் எனக் காகக் காத்து கின்றீர்கள் என்பதைச் சொல்லுங்க" என்ருன் ச.கு. வேறு எதுக்கு: என் எழுத்துக்களேப் படித்திரா, எப்படியிருக்கு ; எங்கே அனுப்பலாம் என்று யோசித்திரா என்றெல்லாம் கேட்கத்தான்: 'அவைகளே அனுப்ப வேண்டிய அருமையான இடம் வெங்கி அடுப்புத்தான் என்று சொல்லத் துடித்தது அவன் மனம் ஆணுல் மற்றவர்களே விணுகப் பகைத்துக் கொள்வா னேன் என்ற நல்லெண்ணமுடைய ரகுராமன் அதைச் சோல்லவில்லே. படித்தேன், ஸார். நீங்கள் கிறையப் படிச்சு பிரமாதமான ஆராய்ச்சிகள் எல்லாம் செய்கிறீர்கள். சிறு விஷயங்களேப் பற்றிக்கூட மிக ஆழமாக ஆராய்ந்து...” "மிஸ்டர் சாமன். உங்களுக்குத் தெரியுது என்னுடைய மதிப்பு. உலகத்துக்குத் தெரியலேயே. ஊம்! என்று வருத் தப்பட்டார் அவர். அவனுக்கு அனுதாப உணர்ச்சி எழவே. "என்ன செய்கிறது! இதை எந்தக் கம்பெனிக்கு அனுப்பி வைக்கிறது என்றே புரியலியே, ஸ்ார். எனக்குத் தெரிந்த பப்ளிஷர் யாரும் கிடையாது. பெரிய மனிதர் யாரையாவது பிடித்து...' என்று இழுத்தான். அவர் சீறிச் சிரித்தார். பெரிய மனிதனும்! எவனய்யா பெசிய மனிதன் ? குழையடிக்கிறவங்க பத்துப் பதினஞ்சு பேரு கூடிவிட்டால் எவனுமே சாமியாட ஆரம்பித்திடுருன். நீரும் நானும் பெரிய மனிதராக முடியாதா என்ன ? நமக் கும் அஞ்சாறு லோட்டாக்கள் வேணும். அவ்வளவுதான்! அதுதான் கான் சொல்கிறேன், எனக்கு நீங்கள் பாஸ்வெல் லாகப் பணிபுரியுங்க. உங்களுக்கு நான் பாஸ்வெல்லாக மாறிவிடுகிறேன். சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம் என்னப் பற்றி நீங்கள் நெடுகச் சொல்லுங்க. அதேமாதிரி நானும் உமக்கு உதவி புரிகிறேன் என்றர். - _சகுராமனுக்குச் சிரிப்பு வந்தது. ஆனல் அதை அடக் கிக்கொண்டு அதற்கென்ன செய்தால் போச்சு!" என்ருன். அப்பு நாளேக்கே அனுப்பிவிடுங்கள். ஸ்டாம்புச் செல வுக்கு கான் காசு தாறேன். வாங்க. வீட்டுக்குள்ளே வாங்க, என்று அழைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/96&oldid=814853" இலிருந்து மீள்விக்கப்பட்டது