பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 29

மலைகெழு நாட! மாவண் பாரி! கலந்த கேண்மைக்(கு) ஒவ்வாய் நீஎற் புலந்தன யாகுவை புரந்த யாண்டே பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லா(து) ஒருங்குவரல் விடாஅ(து) ஒழிகெனக் கூறி இனயை ஆதலின் நினக்கு,மற்றியான் மேயினேன் அன்மையான்ேiர்பினும் இம்மை போலக் காட்டி உம்மை இடையில் காட்சி நின்னுெ(டு) உடனுறை வாக்குக உயர்ந்த பால்ே.’ (புறம். 236) என்ற அருந்தமிழ்ப் பாடலேக் கல்லும் புல்லும் கரைக் துருகப்பாடி, மாநில மக்களே எல்லாம் கண்ணிர் வெள்ளத் தில் வீழ்த்தி, ஊணின்றி வடக்கிருந்த கபிலர் பெருமானுர் உயிர் துறந்தார்.

வீரப்போர் புரிந்து மாண்டான் வேள் பாரி , வடக் கிருந்து உயிர் துறந்தார் கபிலர். கலைக்காகவே வாழ்ந்த கொடைப்பெருஞ்சான்ருே னும் மறைந்தான் , அவன் கட் பிற்காகவே வாழ்ந்த அருந்தமிழ்ச் சான்ருேரும் மறைக் தார். வெங்கதிரையும் தண்ணிலவையும் இழந்த வானம் போலத் தமிழகம் ஆராத் துயர்க்கடலில் ஆழ்ந்தது...... ஈராயிரம் ஆண்டுகள் சென்றுவிட்டன. கபிலர்-பாரி காலம், இலக்கியக் காலமாய்-பழந்தமிழ் நூற்ருண்டாய்மாறிவிட்டது. எனினும், இன்றும்-என்றும்-இவ்விரு பெருஞ் சங்ககாலச் சான்ருேரையும் இன்பத் தமிழகம் தன் இதயக் கோயிலில் வைத் துப் போற்றி வழிபடுவது திண்ணம்.