பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சங்ககாலச் சான்றோர்கள்

நிலை கண்ட ஒளவையார், தன் அன்புச் செல்வத்தைக் கண்ட நேரத்திலும் மனம் ஆறிக் கண் குளிராத சினமுடைய அதிகமானது மனநிலையை எண்ணி எண்ணிப் பாடுகிறார்.

"கையது வேலே; காலன புனைகழல்;
மெய்யது வியரே ; மிடற்றது பசும்புண் ; வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசிவெண் தோடு
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச் சுரியிரும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல
இன்னு மாறாது சினனே! அன்னோ! உய்ந்தனரல்லரிவன் உடற்றி யோரே!
செறுவர் நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பாணைவே!"

(புறம்.100)

இவ்வாறு இரவலர்க்குக் கருணை நில வாய் இகல் வேந்தர்க்கு வெங்கதிராய் விளங்கிய அதிகமானின் சிறப்புக்களையெல்லாம் செந்தமிழ்க் கவிதைகளால் பாடிப்பாடி. மகிழ்ந்தார் ஒளவையார். அவற்றையெல்லாம் நாளும் செவிமடுத்திருந்த அதிகமானும் ' காடும் மலையும் கலந்துறையும் காட்டைப் பெற்றதினும் வயப்புலியனேய வாள் வீரம் மிக்க ஆயிரம் ஆயிரம் மழவர்களடங்கிய படிையைப் பெற்றதினும், களம் பல புகுந்து வலம் பல கொண்டதி ஆணும், இணையிலா விரன் என்று எங்கும் பரவிய இசையினும் பெரும்பேறன்றோ இன்ஒளவைப் பிராட்டியாரின் திரு வாயால் புகழ் பெறும் பெரும்பேறு?" என எண்ணி மகிழ்ந்து இன்பக் கடலில் ஆடியிருந்தான்.

இந்நிலையில் அதிகமானின் வாழ்வில் துன்ப இருள் படியலாயிற்று; போர் மேகங்கள் குமுறிக்கொண்டு சூழலாயின. தன் தலை நகரைப் பாழாக்கிய அதிகமானது