பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சங்ககாலச் சான்றேர்கள்

பக்கமணிகள் மாறிமாறி ஒலிக்கப் பாடி வந்த புலவர்கள் எறிச் செல்லுமாறு செய்தான். இத்தகைய அருளும் பொருளும் கிறைந்த அறவோனுய் விளங்கிய குமணன் புகழ் பகலவன் ஒளி போல எங்கும் பரவித் திகழ்ந்தது. அவன் வாய்மையினேயும் வண்மையினேயும் அறிந்த புல வர் பெருந்தலைச்சாத்தனரும் அத்தகைய மேலோன் இருக்குமிடம் மேவித் தம் வறுமைத்துயர் களையத் துணிந்தார்.

குமணனது திருநாட்டை அடைந்தார் புலவர். அங்கு அவர் கேட்ட செய்தியும் கண்ட காட்சிகளும் அவர் உள்ளத்து உணர்வுகளே விறு கொண்டு எழச் செய்தன.

உரிய நாளில் அரியனே ஏறி அருளாட்சி புரிந்து வக்க குமணனுக்குத் தம்பி ஒருவன் இருந்தான். எவ் வாருே அவன் மனத்தில் தீய எண்ணங்கள் தோன்று மாறு செய்தனர் பண்பற்ற சிலர்; அண்ணனது புகழை யும் பெருமையையும்பற்றிப் பெருமை கொள்ள வேண் டிய அவன் மனத்தில் பொருமைத்திக் கொழுந்து விட்டு எரிய வழி வகுத்தனர். சிறியார் விரித்த சூழ்ச்சி வலையில் இளங்குமணன் சிக்கிளுன் , அறிவிழந்தான் ; அறமற்ற செயல்களேச் செய்யத் தலைப்பட்டான்.

'நிலத்தியல்பால் நீர்திரிந் தற்ருகும் மாந்தர்க்(கு)

இனத்தியல்ப தாகும் அறிவு." (குறள், 452) என்ற வள்ளுவர் குறளுக்கு ஒர் எடுத்துக்காட்டாயிற்று இளங்குமணன் வாழ்க்கை. அழுக்காறு என்னும்பாவிக்கு இரையாகிய அவன், எவ்வாறேனும் அண்ணனே அரி யணேயினின்றும் அகற்றிவிட்டு அதில் தான் அமர வேண்டுமென்று ஆசை கொண்டான்; தன் ஆசையை அண்ணன்பால் சென்று குறிப்பாகவேனும் கூறியிருப் பின், அன்றலர்ந்த செந்தாமரை'யினும் ஒளி கிறைந்த