பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சங்ககாலச் சான்ருேர்கள்

தாள்தாழ் படுமணி இரட்டும் பூநுதல் ஆடியல் யானை பாடுநர்க்(கு) அருகாக் கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றனெ னுகக் கொன்னே படுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என் நாடிழந் ததனினு தனியின் ஆதென வான்தந் தனனே தலையெனக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்; ஆடுமலி உவகையொடு வருவல் ஓடாப் பூட்கைதின் கிழமையோற் கண்டே. (புறம். 165) நல்லிசைப் புலவரின் கற்றமிழ்ச் சொற்களேக் கேட் டான் இளங்குமணன் ; காணிஞன். வாள் தந்தனனே தலை எனக்கிய, என்ற புலவரது மொழி அவன் நெஞ்சைப் பிளந்தது. ஆருத்துயர் உற்ருன் , கண்ணிர் வடித்துக் கற்சிலேபோலகின்றன். சாத்தனர் இளங்குமணன் கண் னிைர் வெள்ளத்தைக் கண்டார். கடைத்தம்பியாய் இருந்த அவன் கல் நெஞ்சும் கரைந்து உருகும் நீர்மையை அறிந் தார் ; வசையில்லாக்குடியில் தோன்றிய அவன்பால் விலங்கு மனம் அழிந்து தெய்வமனம் முகிழ்த்தலை உணர்ந் தார் ; உவகை கொண்டார். -

இளங்குமணன் தன் பாழ் நெஞ்சின் பான்மை உணர்ந்த அக்கணமே அரியனேயினின்றும் இழிந்து, புலவர் திருவடிகளில் வீழ்ந்து, " அருந்தமிழ்ப் பெரியீர், எவ்வாறேனும் கானகம் பற்றியுள்ள என் அண்ண்னை நாடாளும் காவலன் ஆக்க வேண்டும். தி நெறிப்பட்ட என் வாழ்வு இனியேனும் நன்னெறி காணத் துணை புரிய வேண்டும்,' என்று இரந்தான். பாய்மா பூட்டிய தேரின் மீது புலவரை அமரச்செய்து கானகம் நோக்கி விரைந் தான் இளங்குமணன். வான் வழங்கியற்கை வளியென, அதனினும் கடுஞ்செலவுடை மனமெனப் பறந்தது தேர்.