பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

ஒரு நாட்டின் வரலாற்றினைச் செம்மையாக அறிந்து கொள்ள இன்றியமையாது வேண்டப்படுவனவற்றுள் கல்வெட்டுக்கள் முதன்மையான இடம்பெறத் தக்கவை. ஏனெனில், ஏடுகள்மூலம் கிடைக்கும் சான்றுகளில் மிகைப் படுத்தப்பட்டனவும், மாறுபாடுடைய கருத்துக்களும் இடம் பெறக்கூடும்.

எனவேதான் இற்றை நாள் ஆராய்ச்சியாளர்கள் தம்முடைய ஆராய்ச்சிக்குக் கல்வெட்டுக்களின் துணையைச் சிறப்பாகக் கருதுகின்றனர். அங்ஙனமே தமிழ் இலக்கியம் பயில்வோர்க்கும் 'கல்வெட்டு' ஒரு முதன்மையான பாடமாக வைக்கப்படுகின்றது.

சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் என்னும் இவ் வாராய்ச்சி நூல், ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்டது. பிற கல்வெட் டாராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகளோடு ஒப்பிட்டு அவற் றுள் காணப்படும் குறைகளையும் நிறைகளையும் எடுத்து விளக்கும் இந் நூலாசிரியரின் ஆராய்ச்சித்திறம், ஆராய்ச்சி மாணவர்கட்குப் பெருந்துணை புரியவல்லது.

சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டுக்களைப் பற்றிய செய்திகள் பல்வேறு நூல்களில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றைப் பற்றிய கருத்துக்களும் நூல்களிலும் கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகளிலும் பரவிக் கிடக்கின்றன. அவற்றைப் பற்றி ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளர்கட்கு அனைத்தை யும் தேடிக் கண்டுபிடிப்பது கடினம். அந்த அரிய பணியை ஆய்வுப் பேரறிஞராகிய இந் நூலாசிரியர் இந் நூல் வழி எல்லாக் கல்வெட்டுக்களையும் மூல வரிவடிவத்துடன் கொடுத்து எளிமைப்படுத்தியுள்ளார். தமிழ்க் கல்வெட்டுக்