பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் கல்வி நிலை

113

ளுடைய உள்ளத்திலே சிறந்து தோன்றும் உள்ளத்துணர்ச்சிகள் இன்ன எனத் தமிழியல் நூலாகிய தொல் காப்பியம் கூறுகின்றது. இவ்வாறு நிலத்திற்கும் அங்கு வாழும் மக்களின் உள்ளத்துணர்ச்சிக்குமுள்ள தொடர்பினைக் கண்டுணர்ந்தமையால், மக்களது உள்ளத்தின் இயல்பினை உணர்வதில் தமிழர் நிறைந்த தேர்ச்சியுடையார் என்பது நன்கு துணியப்படும்.

உலகத்தின் தோற்றம், உயிர்த்தோற்றம், உலக ஒடுக்கம், அரசர் வழி முறை, காலவரையறை, மன்னர் வரலாற்றுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் என்னும் இப்பொருள்களை விரித்துரைப்பது உலக வரலாறாகும். இவ் வரலாற்றினை உணர்ந்தவரே முன்னுள்ள பேரறிஞர்கள் அறிவுறுத்திய கலைச் செல்வத்தை நன்குணரும் ஊக்கமும் ஆற்றலும் பெற்றவராவர். இத்தகைய உலக வரலாறு பண்டை நாளில் தமிழ்க் கல்வியில் இடம பெற்றிருந்தது. இவ்வரலாறு உரைநடையில் அமைந்தால் தான் எல்லா மக்களுக்கும் பயன்படும் என்பது முன்னுள்ளோர் கருத்தாகும். இவ்வாறு உரை நடையில் அமைந்த பழைய வரலாறு தொன்மை என்ற சொல்லால் வழங்கப்பட்டது.

அறத்தின் முறை தவறாது தாம் செய்யும் தொழிலால் பொருளீட்டி இன்பம் நுகர்தற்குரிய வாழ்க்கையின் இயல்பினை அகம், புறம் என இரண்டு பிரிவாக வகுத்து விளக்குவதே தமிழுக்குச சிறப்பாக உள்ள பொருளிலக்கண நூலாகும். மக்கள் வாழ்க்கையின் இயல்பினே உள்ளவாறு விளக்கியுரைக்கும் வாழ்வியல் நூலாகிய பொருளிலக்கணப் பகுதி, தமிழ் மொழியிலன்றி வேறு எம்மொழியிலும் காணப்படாத சிறப்புடையதாகும்.

மக்களுடைய வாழ்க்கைக்கு அரண் செய்வது அரசியல் நூற்கல்வியாகும். அரசியலின் இயல்பினை ஆசிரியர்