பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புலவர் கண்ட வருங்காலத் தமிழகம்

153

யுட்கள் 'ஆற்றுப்படை' என்ற பெயரால் சங்க இலக்கியங்களிற் காணப்படுகின்றன. பரிசில் பெற வரும் கலைவாணர்கள் தங்கள் கல்வித் திறத்தில் கிறைந்த ஆற்றல் பெற்றவர்களாயினும், அன்றி அவ்வாற்றல் பெறாதவர்களாயினும், அவர்தம் குறைபாடுகளே மறைத்து, அவர்கள் அறியாத கலைத்திறத்தில் வேண்டும் நுட்பங்களே அவர்களுக்கு முன்னரே அறிவித்து நன்றாக நடத்தும் பண்பாடு தமிழ்ப் புலவர்பால் நிரம்ப அமைந்திருந்தது. பக்கத்தார் இயல்பறிந்து அவர்க்குத் தீங்கு செய்யாது நன்மையே புரிந்தொழுகும் பண்புடைமையே புலவர்களால் உருவாக்கப் பெற்ற தமிழகத்தின் நாகரிக வாழ்வாகும். பண்டைத் தமிழ்ப் புலவர்கள் விரும்பியவண்ணம் நனி நாகரிக வாழ்வினை எதிர்காலத் தமிழ் மக்கள் எய்தி இன்புறுவார்களாக!