பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழகம்

11


கின்றார்[1] . இக்கூற்றுக்கு இலக்கியமாகத் தமிழ் வேந்தர் மூவரும் தத்தம் கடமையினை உணர்ந்து செயலாற்றினர்.

தமிழ் வேந்தர் மூவரும் தமக்குரிய நிலப்பகுதியைக் கருத்துான்றி ஆளுதற்கேற்றவாறு, சேர நாடு, பாண்டி நாடு, சோழ நாடு என மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டாலும், தாம் ஒரே தமிழ்க் குடும்பத்தவர் என்னும் நன்னோக்கமுடையவராய்த் தமிழ் நாட்டின் அரசியலைக் கூட்டரசாக ஒருங்கிருந்து நிகழ்த்தினர். தமிழ் நாட்டின் சார்பில் வெளி நாடுகளுக்கு எத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டாலும், அவ்வாணை மூவேந்தருடைய வில், கயல், புலி என்னும் மூன்று அடையாளங்களும் சேரப் பொறிக்கப் பெற்றுச் செல்வது வழக்கம் [2]. தமிழ் வேந்தர் மூவரும் தமிழகத்தின் நலங்குறித்து ஒன்று கூடி அரசவையில் வீற்றிருந்து முறை செய்தலும் உண்டு. இத்தகைய ஒற்றுமைத் தோற்றம், தமிழ் மக்களுடைய உள்ளத்திற்கு அளவில்லாத மகிழ்ச்சியை விளைவித்தது. பரிசில் பெறச் சென்ற பொருநன் ஒருவன், தன் சுற்றத்தாருடன் யாழிசையும் பாடலும் ஆடலும் ஒருங்கு நிகழ்த்தி வழியிடையே தங்கியிருக்கின்றான், இங்கே யாழினிடத்தே தோன்றும் இன்னிசையும் அதற்கியையப் பாடும் மிடற்றுப் பாடலும்


  1. நெல்லும் உயிரன்றே ; நீரும் உயிரன்றே;
      மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம் ;
      அதனால், ‘யான் உயிர்’ என்ப தறிகை
      வேன் மிகு தானை வேந்தற்குக் கடனே.
    -புறம். 186.

  2. ‘வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்
      தென்றமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி
      மண்தலை யேற்ற வரைக ஈங்கென.’
    -சிலப். காட்சி. 170-72.