பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

சங்ககாலத் தமிழ் மக்கள்


“வேந்தர் பெருமானே, யானை, குதிரை, தேர், காலாள் என்னும் நால்வகைப் படைகளாலும் மன்னர்களது சேனை சிறப்புற்றிருந்தாலும், அறநெறியை அடிப்படையாகக் கொண்டதே அரசர் பெறும் வெற்றியாகும். அதனால், ‘இவர் நமக்கு வேண்டியவர்’, எனக் கருதித் தம்மவர் செய்த கொடுந்தொழிலைப் பொறுத்துக்கொள்ளாமலும், ‘இவர் நமக்கு அயலார்’, எனக் கருதிப் பிறருடைய நற்குணங்களைப் போற்றாமலும், ஞாயிற்றை ஒத்து வெம்மை மிக்குத் தீயாரைக் கொல்லும் வீரமும், திங்களையொத்து உளங்குளிர்ந்து நல்லாரைப் போற்றும் அருளுடைமையும், மழையைப்போன்று எல்லார்க்கும் வரையாது வழங்கும் வண்மையும் என இம்மூன்று குணங்களையும் உடையவனாகி, வறுமையுற்றார் நின்னாட்டில் இல்லையாக, நீ நெடுங்காலம் வாழ்வாயாக” என மருதன் இளநாகனார் நன்மாறனுக்கு அரசியல் முறையினை அறிவுறுத்தினமை கருதத் தகுவதாம்.

அறத்தினை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப் பெற்றதே தமிழ் வேந்தரது அரசியல் நெறியாகும் [1] . அக்காலத் தமிழ் மன்னர் மேற்கொண்ட போர் முறையும் அறத்தின் வழியமைந்ததேயாகும் [2] . ஒரு நாட்டின்மேற் போர் தொடங்குதற்கு முன் அந்நாட்டிலுள்ள பசுக்களையும், பசுப்போன்று தம்மைக் காத்துக்கொள்ளும் ஆற்றலற்றராகிய பார்ப்பார், பெண்டிர், பிணியாளர், மூத்தோர், குழந்தைகள், பிள்ளைப்பேறில்லாத ஆடவர் என்னும் இவர்-


  1. ‘அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்’
    -பொருநராற்றுப்படை

  2. ‘அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்’
    -புறம். 62.