பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 - சேரர்

' மிகப்பெருங் தான்ையோ டிருஞ்செரு வோட்டி

அகப்பா எறிந்த அருக்கிறல்.”

(சிலம்பு, உஅ : கசங்-க) தம்முள் ஒற்றுமைகொண்டு ஊராண்டு வாழ்வதற்கு மாருக ஒருவரோடொருவர் பகைகொண்டு வாழும் இயல் பினராய தமிழ்வேந்தர் மூவரும், கம்மினும் ஆற்றல் மிக்க அரசன் ஒருவன் ஒருகுடியில் தோன்றிவிட்டால், அவனே அழிக்கச் செய்யும் போரில் மட்டும் ஏனேய இரு அரசர் களும் ஒன்று கூடுவதையும், தமக்குத் துணையாகப் பிற குறுகில மன்னர்களையும் இணைத்துக் கொள்வதையும் வழக்கமாகக் கொண்டு விளங்கினர். பல்யானைச் செல் கெழு குட்டுவன் ஆற்றலும் ஆண்மையும் அறிந்தி, அக் காலத்தே சோழநாட்டையும் பாண்டி நாட்டையும் ஆண் டிருந்த இருபெருவேந்தர்களும், சில வேளிர்களேத் துணை யாகக்கொண்டு குட்டுவனே எதிர்த்தனர் ; குட்டுவன் அவர் களையும் அழித்து, அவர்களுக்கு அரணுக அமைந்திருந்த கடலானேயும், காட்டானேயும் அழித்தான்். அழிக்கலாகா அவன் ஆற்றல் அறிந்த அரசர்கள், அவனுக்கு அஞ்சி வாழலாயினர் :

'பணைகெழு வேந்தரும், வேளிரும் ஒன்றுமொழிந்து

கடலவும், காட்டவும் அரண்வலியார் நடுங்க.”

(பதிற் : கட0) பழைய தமிழகத்தில், பூழியர், மழவர், கொங்கர் என்ற மறவர்மரபினர் பலர் வாழ்ந்திருந்தனர்; பகைவர் நாடுகளைவென்று கைக்கொள்வதே தொழிலாகக் கொண்டு விளங்கிய பல்யானைச் செல்கெழு குட்டுவன், தன்படை யின் வன்மையை மிகுத்தற்பொருட்டு, அவ்வீரர்களே வென்று கன்படையில் தொழிலாற்றுமாறு செய்தான்் : அவருள் பூழியர் என்பார், பூழிநாட்டில் வாழ்க் கிருந்த ஆயர் ஆவர்; இவர்கள் மிகப் பெரிய ஆனிரைகளையும், பலப் பல யானைகளையும் கொண்டிருந்தனர் ; செருப்பு என்ற பெயருடையதொரு மலையினையும் உரிமையுடையதாகப் பெற்றிருந்தனர்; இவர்கள், முல்லைப் பூவாலாய கண்ணி