பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங், முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்

பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் வழிவந்த சேர வேந்தருள், முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதனும் ஒரு வன். இயற்பெயர்க்கு முன்னர், அப் பெயருடையார்க்குப் பெருமையளித்தற்பொருட்டு உயர்வுப் பொருள்தரும் நெடு என்ற அடைகொடுத்து வழங்குவது வழக்கமாம்; நெடியோன், நெடுங்கிள்ளி, நெடுஞ்செழியன், நெடுமாவள வன், நெடுமானஞ்சி, நெடுவேள் என்ற பெயர்களைக்சாண்க இவ்வாறு வந்த பெயர்களுள், நெடுஞ்சேரலாதன் என் பதும் ஒன்று. சேரவேந்தருள், அப்பெயர் உடையார் பல ாவர் ; குடக்கோ நெடுஞ்சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பதை நோக்குக. அவரின் வேறு அறிதற்கு, இவன் முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் என அழைக்கப்பெற்று ளான். இவன் பெயர்க்கு முன்வரும் முடங்கிக்கிடந்த என்ற அடை வருதற்காம் காரணம் இஃது என்பது புலப்படவில்லை. முடங்கிக் கிடந்த நெடுஞ் சேரலாதன், பழந்தமிழ்ப் புலவருள் ஒருவனவன் என்பதே அறியக்கிடக்கிறது; அவன் அரசியல் வாழ்வுகுறித்து எதையும் கூறு கற்கில்லை.

நெடுஞ்சேரலாதன் பாடிய நெய்தற்றிணை தழுவிய பாட்டொன்று மிகவும் நயம் செறிந்து காணப்படுகிறது ; சிறுசிறு கண்களைக் கொண்ட பெரிய வலையினேப் பருத்து நீண்ட கயிற்ருேடு பிணைத்துக்கொண்டு, கடலிடையே சென்று கடல் வளமெல்லாம் சுருங்கிற்ருே என எண்ணு மாறு, அக்கடல் மீன்கள் எல்லாம் ஒருங்ககப்படுமாறு దా$g விட்டு, மாலையில் கரைசேர்ந்த வலைஞர், தம் வரவினைக் கவலையோடு எதிர்நோக்கிக் காத்துகிற்கும் தம் மனேவி யரைக் கண்டு மகிழ்ந்து, ஊக்கம் மிக்கு, இளையரும் முதி யருமாகிய எல்லோரும் ஒன்றுசேர்த்து, அவ்வலையினைப் பேராரவாரத்திற்கிடையே வருங்கிஇழுத்துக் கரைசேர்த்து வலையில் அகப்பட்டுக்கிடக்கும் மீன்களைப் பிரித்தெடுத்துக் கசையில் குவித்து, ஆங்குவந்து குழுமிகிற்கும் இாவலர்க்கு