பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் செக்தமிழ் மாநிலத்தை ஆண்ட முடியுடை வேந்தர் மூவருள், இரண்டாமவராக ஆன்ருே சால் எண்ணப்பட்டோர் சோழ மன்னாாவர்.

இச் சோழ வேந்தர் குடியும் கூழின் பெருக்கமும் கொண்டோர் : அஃதோடு, தெய்வக் காவிரித் தீதுதிர் சிறப்பும் சேர்ந்த திருவினராவர்.

இவர்தம் வரலாறு கற்றற்கும், கேட்டற்கும், அறி தற்கும் விழுப்பமிக்க மேன்மைத்தாகும். சங்ககால அரசர் வரிசை"யில் முதலாவதாகச் சேரர்’ என்னும் பெயரால் சீரிய நூல் ஒன்று அண்மையில் வெளிப் போக்தது; இஃது அதில் இரண்டாவதாகச், சோழர்' என்னும் பெயரால் வெளியிடப்பெறுகின்றது.

இவர் இராசசூயம் வேட்ட பேருநற்கிள்ளி' முதலாக, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி இறுதி யாக இருபத்தொருவராவர். இச் சோழர் வரலாற்றைப், புலனர், திரு. கா. கோவிந்தன் எம்.ஏ. அவர்கள் வரைக் துதவியுள்ளார்கள். இதனையடுத்து இவ்வரிசையில் பாண் டி ய ர் குறுகிலமன்னர் முதலியோர்களின் வரலாறுகளும் விரைந்து வெளிவரும்.

தமிழ் மேன்மக்கள், இவைகளை வாங்கிக் கற்று வரலாற்றுண்மை தெரிந்து, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ எனக் கொண்டு, உலகம் யாங்க லும் இதனைப் பாப்பி இன்புறுவார்களென நம்பு கின்ருேம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.