பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ ர்


مصلى الله عليه وسلمحصـاسـ

தோற்றுவாய்

சேர, சோழ, பாண்டியப் பேரரசுகள் மூன்றும், மேற்கே உரோமானியப் பேரரசும், கிழக்கே சீனப் பேரா சும் சிறந்து விளங்கிய அக்காலத்திலேயே, அவற்ருே டொப்பச் சிறந்து விளங்கிய பழமையும் பெருமையும் பெற்றுத் திகழ்ந்தன. இவ்வரசுகள் இன்ன காலத்தே தோன்றின என்ருே, இன்னால் தோற்றுவிக்கப்பட்டன என்ருே அறுதியிட்டுக் கூறமாட்டா அத்தனைப் பழைமை யுடையனவாம். இவ்வரசுகளின் பழமைபற்றிக் கூறவந்த ஆசிரியர் பலரும், கல்கோன்றி மண்கோன்ருக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி, படைப்புக் காலக்தொடங்கி மேம்பட்டு வரும்குடிகள்” என்றே கூறிச் செல்வாரா பினர்.

சேர, சோழ, பாண்டியர் மூவரும், ஒரு தாய் வயிற்றில் பிறந்தார் எனவும், அவர்கள் தென்னுட்டில் நாகரிக வளர்ச் சிக்குத் தோன்றுமிடமாகிய தாமிரபரணி ஆற்றின் கரை யில், கொற்கையைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்து வக் தனர் எனவும், பின்னர் யாது காரணத்தாலோ, அவர்கள் தம்முள் பிரிந்தனர் எனவும், அவருள் பாண்டியர் ஆங் கேயே தங்கி விட்டனர் எனவும், ஏனே இருவரும்முறையே மேற்கிலும், வடக்கினும் சென்று, கங்கள் தங்கள் பெய ரால் தனியாசு அமைத்துக் கொண்டனர் எனவும் பழைய வரலாறுகள் கூறுகின்றன.

பழமையும், பெருமையும் பெற்று விளங்கிய மூவேக் தருள் நடுவண் வைத்துச் சிறப்பிக்கப் பெறும் சோழர், கிள்ளிவளவன், செம்பியன், சென்னி என்ற பிற சொற்க