பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 சோழர்

நாட்டு மக்கள் தம்முள் பகையின்றிக் கலந்து உறவாடி வாழும் இடங்கள் அமைந்துள்ளன. வண்ணம், சுண்ணம் முதலாய வாசனைப் பொருள்களை விற்போரும், பட்டானும், மயிரானும், பருத்தி நூலானும் ஆடை முதலாயின நெய் யும் சாலியரும், முதிரை முதலாம் கூலங்களேக் குவித்து விற்கும் கூலவணிகரும், பிட்டு, அப்பம், கள், மீன், கடல் உப்பு, வெற்றிலை, இறைச்சி ஆக இப்பொருள்களை விற்போ ரும், கருங்கைக் கொல்லர், செம்பு செய்குநர், வெண்கலக் கன்னர், பொன்செய் கொல்லர், மண்பாவை செய்வோர், ஒவியக்காரர், தையல் தொழிலாளர் முதலாய தொழிலாள ரும், பாணர், குழலர் முதலாய இசையாளரும், பிறர் ஏவியன ஏற்றுச் செய்யும் பணி செய்வோரும், தனித் தனியே வாழும் தெருக்கள் பல நிறைந்து விளங்கும்; பொதுவாக நோக்கின், வாணிபம் முதலாயின செய்து பொருள் ஈட்டும் மத்திய வகுப்பு மக்களும், உடல் வருத் தித் தொழிலாற்றி வயிறு வளர்க்கும் பிற்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் வாழும் இடம் மருவூர்ப்பாக்கமாம் எனின் பொருந்தும்,

அனுகுதற்கரிய காவல் அமையப்பெற்று, கடற்கரை யைச் சார்ந்து விளங்கும் பெரிய பண்டசாலையின் கண், கிலத்திலே இ. ரு ங் த கலங்களில் ஏற்றுவதற்காகக் கொணர்ந்த உள்நாட்டுப் பொருள்களும், கலத்திலிருந்து கிலத்தில் இறக்கப்பட்ட வெளிநாட்டுப் பொருள்களும் வரம்பறியாவண்ணம் வத்து குவிந்துகிடக்கும்; அவ்வாறு வந்து குவிந்துள்ள அப் பொருள்கள், அரசனுக்குரிய பொருளைப் பிறர் கொள்ளாவண்ணம், ஒருபொழுதும் மடிந்திராது, நாடோமம் இளேப்பின்றி கின்று காக்கும், புகழ் கிறைந்த சுங்கம் கொள்வோாான், உரிய சங்கத்தில் குறைவு கோமை குறித்து மதிப்பிடப்பெற்று, அரச இலாஞ்சனேயாகிய புலி பொறிக்கப்பெற்று மலைபோல் அடுக்கப்பெறும். -

காற்றின் இயக்கத்தால், கடல்வழியாக வந்த கலங்கள்

கொணர்ந்த, விரைந்த செலவினேயுடைய குதிரைகளும்,