பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சோழர்

பகை விலக்கியது இப் பயங்கெழு மலேயென இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர் வோற்கு மாநீர் வேலி வச்சி. நன்னட்டுக் - கோனிறை கொடுத்த கொற்றப் பக்தரும் மகத நன்னட்டு வாள்வாய் வேந்தன் பகை புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும், அவங்கி வேந்தன் உவர்தனன் கொடுத்த கிவங் தோங்கு மரபிற் ருே.ான வாயிலும்.”

(சிலம்பு, தி: கo-கoச)

' வச்சிாநாடு என்பது சோணை (Son) நதி சூழ்ந்த தேசமாகும் , அதனே அடுத்துள்ளதே மகத நாடு; இது கங்கை யடுத்த பிரதேச மென்பது தெரிந்ததே; அவ்விரு நாட்டாசரையும் வென்ற பின்பே அவங்கி வேந்தனிடம் கட்பு முறையில் அவ்வளவன் சென்றனன் என்று இளங்கோ வடிகள் குறிப்பிடுகிருர் ; இவற்ருல், வச்சிர, மகத நாடுகளை அடுத்து, அவற்றின் வட பக்கத்தில் உள்ள இமயப் பகுதியே சோழன் தன் அடையாளத்தை காட்டிய இடமென்பது

நன்கு விளங்கும்.

“இவ்வாறு இமயப் படையெடுப்பு, சோழன் தலைமை யின் கீழ்த் தமிழ் அரசரால் ஒருகாலத்து நிகழ்ந்தது என்ற வரலாற்றைப் புதியதாகத் தெரியவரும் அரிய செய்தி யொன்றும் ஆதரித்து சிற்பதை இனிக் கூறுவேன் ; மேலே நான் கூறியவற்றை யெல்லாம் ஒரு சோக் கொண்டு நோக்குமிடத்து, கிருமாவளவன் சென்று வந்த இமயமலை, இப்போது வலிக்கிம், புட்டான் என்ற இராஜ்யங்களுக்கு இடையிலுள்ள மலைப்பகுதியே யாதல் வேண்டும். என் னெனில், இப் பகுதியில்தான்், வங்காளத்து டார்ஜீலிங்கி லிருந்து திபெத்துக்குச் செல்லும் கணவாய்கள் உள்ளன : இக் கணவாய்களிற் சில முற்காலத்தும், இக்காலத்தும் வியாபாாப் போக்குவரத்துக் குரியனவாய் அமைந்தன வாகும்; இவைகளும் பல மாதங்கள் வரை பனி மூடப்பெற்று அடைபட்டுக் கிடத்தலால், சில காலங்களே அப்போக்கு