பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்,

சேரர்குடியில் சிறக்கவாழ்ந்த அரசர்களுள், இமய வாம்பன்,நெடுஞ்சேரலாதன் என்பாலும் ஒருவன். அவ இக்கு மனைவியர் இருவர்; ஒருத்தி, சோழன் மணக்கிள்ளி யின் மகளாகிய நற்சோண்ை; மற்றொருத்தி, வேளாவிக் கோமான் பதுமன் எனும் வேளிர் குலத்தலைவன் மகள்; வேளிர் குடியிலே வந்த இப்பதுமன் மகளுக்கும், நெடுஞ் சோலாதனுக்கும் பிறந்த ஆண்மக்கள் இருவர்; ஒருவன், களங்காய்க்கண்ணி நார்முடிச் சோல் எனும் பெயருடை யான்; மற்றொருவன், நச்செள்ளையாரால் பாராட்டப்பெற்ற ஆடுகோட் பாட்டுச் சேரலாதனவன். -

ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், மாருவிளேயுளும் குன்ருவளமும் கொண்டதும், விற்போாஞ்சா வன்களுள ாையும் வருத்தி வாட்டும் குளிர்மிகு காற்றடிக்கப் பெறு வதுமாய துறவு எனும் கடற்கரை நகரைத் தலைநகராக் கொண்டு, சேர்நாட்டின் வடமேற்குப் பகுதியை ஆண்டு வந்தான்். மேலைக் கடற்கரை நகர்களுள் ஒன்முக, மேனுட்டு கில் நால் ஆசிரியர்களால் குறிப்பிடப்பெறும் நெளாா எனும் நகர், இங்கறவே. -

'மரு.அ விளையுள், அரு.அ யாணர்த், தொடை மடிகளைந்த சிலையுடை மறவர் பொங்குபிசிர்ப் புணரி மங்குலெரடு மயங்கி, வருங்கடல் ஊதையிற் பனிக்கும் துவ்வா. சறவின் சாயினத் தான்ே.” (பதிற்று : சுo)

. ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் ஆற்றல்மிக்க போர சனவன்; அவனே எதிர்த்தார் அழிந்தே போவர்; போர்க் களத்தே அவன் கண்வலைப்பட்டுப் பிழைத்தார் எவரும் இலர்; எமன் விரித்த வலையில் வீழ்ந்தார் எவ்வாறு பிழைத் கல் அரிதாமோ, அவ்வாறே, இவன் பார்வையிற் பட்ட ஒரும் பிழையார். களத்தில், இவன் பார்வை ஒருவர்மீது வீழ்ந்தது என்றால், அவர்மீது எமன் வலைவீசிவிட்டான்