பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சோழர்

இதல்ை, பரணர், நக்கீரர், மாமூலஞர், கருங்குழ லாதனர், கழாத்தலையார், வெண்ணிக் குயத்தியார் ஆக இவர்களால் பாடப்பெற்முேன் முதற் கரிகாலன் என்ப தும், இவர்கள் பாடலால் அறியப்பெற்ற புறப்புண் நாணி வடக்கிருந்த பெருஞ்சேரலாதனெடு போசிட்டோன் இம் முதற் கரிகாலனே என்பதும், வடநாடு சென்ருேன் இவ ல்ைலன் என்பதும், கடியலூர் உருத்திரங் கண்ணளுர், முடத்தாமக் கண்ணியார் இவர்களால் பாடப்பெற்ருேனும், முடத்தாமக் கண்ணியார் கூற்றுப்படி உருவப்பஃறேர் இளையோன் சிறுவனும் ஆகிய கரிகாலன் இாண்டாம் கரி காலன் என்பதும், இவனே வடகாடு சென்ருேன் என்ப தும் அவர்கள் கருத்தாதல் தெளிவாம்.

கரிகாலன் இருவர் என்ற கொள்கையுடையார், "இலங்கை வரலாற்றைக் கூறும் மகாவம்சம், கி. பி. 171198-இல் ஒரு கயவாகுவையும், கி. பி. 12-ம் நூற்ருண்டின் முற்பகுதியில் ஒரு கயவாகுவையும் குறிப்பிடுகிறது; இவ் விருவருள் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்தவன் முதற் கயவாகுவே யாதலின், அவன் காலம் இரண்டாம் நூற்ருண் டின் இறுதிக்காலமே. வடக்கே கங்கையாறு வரை பிரபல முற்றிருந்த ஆந்திர சதகர்ணி அரசன் பக்ருபூநீ என்பவன் கி. பி. 166-196-இல் அரசாண்டவனுவன்; இவனே சிலப்பதி காரத்தில் கூறப்பெற்ற செங்குட்டுவன் நண்பன் நூற்றுவர் கன்னர் என்பவன்; இவன் காலம் கயவாகுவின் காலத்தோடு ஒற்றுமையுடையது; ஆகவே செங்குட்டுவன் காலம் அவ் விரண்டாம் நூற்ருண்டின் இறுதிக்காலமே ஆகும்; செங் குட்டுவனுக்கு முற்பட்டவன் கரிகாலன் ஆதலாலும், அவன் வடநாடு செல்ல ஏற்றகாலமாக விளங்கியது, புஷ்யமித்ர சுங்காவுக்குப் பிற்பட்ட காலமே (கி. மு. 148-27) ஆகலா லும், இக்காலமே, இலங்கைமீது தமிழாசர் படையெடுத் துச் செல்ல ஏற்றகாலம் என்று மகாவம்சம் கூறுவதாலும், இரண்டாம் கரிகாலன் காலம் கி. மு. 60, கி. மு. 20-க்கு இடைப்பட்ட காலமே ஆகும்” என்றும் முடிவுசெய்வர்.