பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 73

சிலப்பதிகாரம் கூறும் வளவன் கிள்ளியும், மணி மேகலை கூறும் மாவண் கிள்ளியும், கோவூர்கிழார் முதலாம் புலவர் போற்ற வாழ்ந்த கிள்ளிவளவனே ஆவர் என் பாரும், மூவரும் ஒருவரல்லர்; வேறுவேறுபட்டவரேயாவர் என்பாருமாக ஆராய்ச்சியாளர் இருவேறு கருத்துடைய ராவர். கிள்ளிவளவன் என்ற பெயருடையார் பலர் இருப் பதாலும், அவர்தம் வரலாறுகள் ஒன்றற்கொன்று முரண் பாடுடையவாகக் காணப்படுதலாலும், அவர்தம் வர லாற்றை அ. தியிட்டுக் கூறு தற்கண் அறிஞர்கள் பெரிதும் விழிப்புடையாதல் வேண்டும்.