பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி 89

குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார் செம்புறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைக்தலே சவட்டிக்

கொன்ற யானே.” (அகம்: எதி)

தன்னுட்டின் வடபகுதிக்கண் தொல்லை விளை த்து வந்த வடுகரை அழித்த, அச்சிறப்புத் தோன்ற செருப் பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி' எனும் சிறப்புப் பெயர் பெற்ற சென்னி, தென்குட்டுக் கடற்கரைகளில் வாழ்ந்து, சோழ பாண்டிய நாடுகளுட் புகுந்து பாழ் விளேத்து குறும்பு செய்துவங்க குறுகில மன்னர் குழுவாகிய பரதவர் என்பார் தம் ஆற்றலையும் அழித்து அமைதி நிலைநாட்

'தென்பாதவர் மிடல்சாய

வடவடுகர் வாளோட்டிய.” (புறம்: டனஅ)

இனி, ஈண்டுக் கூறிய வடவடுகராவார், வடுகர்வாழ் கிலத்திற்கும் வடக்கில் வாழ்வாராகிய கோசராவர்; ஆகவே, இளஞ்சேட்சென்னி, கோசரையும், அவர்துணை பெற்றுத் தமிழகத்துட் புகுந்த மோரியரையும் வென்முன் எனக் கூறுவாருமுளர். தமிழர்கள், தங்கள் காட்டை அடுத்து வடக்கே வாழ்க் தாரை மட்டுமே வடுகர் என அழைத்து, அதற்கு அப்பால் வாழ்ந்தாரை எல்லாம், கோசர், மோரியர், கந்தர் என அவரவர்க்குரிய இனப் பெயரிட்டே அழைத்துள்ளனர் ஆதலாலும், தமிழ் நூல் களில் யாண்டும், கோசர் வடுகர் என அழைக்கப்பெற வில்லை ஆதலாலும், புறநானூற்றில், வடவடுகர் என வந்து வழங்கும் அச்சொல், அப்பாட்டின் மேல்வரிக்கண் தென் பரதவர் என வந்ததற்கேற்ப, எதுகை நோக்கி வடவடுகர் என வந்துளதே யல்லாமல், வடுகர்க்கும் வடக்கில் வாழ்வார் என்ற பொருளில் வந்திலது. ஆதலாலும், பாழியைக் கைப் பற்றின்ை இளஞ்சேட்சென்னி எனக் கூறும் அகநானூற் மறுப் பாட்டில், ஆண்டு அவனுல் அழியுண்டார், வடவடுகர் எனக் குறிப்பிடப் பெருமல், வடுகர் என்றே குறிப்பிடப் பெற்றுள்ளமையாலும், மோரியர் தென்னுட்டுப் படை