பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. நெடுங்கிள்ளி

ஒரு குடைக்கீழ் இருந்து உயர் பெரும் புகழ்பெற்று விளங்கிய சோணுடு கரிகாற் பெருவளத்தான்் காலத்திற் குப் பின்னர் இரு பிரிவாகிப் பகைகொண்டு பாழுறத் தொடங்கிவிட்டது; ஒரு குடிக்குள்ளே உருவெடுத்த அரசியற் போட்டியில் அறிவிழந்து உயிர் இழந்தோன் இந் நெடுங்கிள்ளி. உறையூர் ஆண்ட அரசன் இறந்து விட்டான்; அவ் வரியணையை அடைவதில் அரசர்க எளிடையே ஒற்றுமை உண்டாகவில்லை ; அதைத் தான்ே கைப்பற்றி ஆள எண்ணினுன் கலங்கிள்ளி எனும் அரசன் ; உறையூர் அரசன் உயிரிழந்த காலத்தே, ஆவூர்க் கோட் டைக்கண் வாழ்ந்திருந்த நெடுங்கிள்ளியும், உறையூர் ஆட்சி உரிமையைப் பெற உளங்கொண்டான் ; இதனுல் நெடுங் கிள்ளிக்கும், கலங்கிள்ளிக்கும் பகை உண்டாயிற்று; பகைவன், படைபலம் பெற்று வளர்தற்குமுன்னர், அவனே அழித்துவிடுவதே போர் துணுக்கமாம் ஆதலின், நெடுங் கிள்ளி ஆவூர்க்கோட்டையைவிட்டு வெளி வருதற்கு முன்னரே, அக்கோட்டையை முற்றி அழித்துவிடத் துணிந்தான்் நலங்கிள்ளி , அவ்வாறே படையுடன் போந்து ஆவூரை முற்றி கின்றுவிட்டான்; நலங்கிள்ளியின் பெரும் படையினே எதிர்த்துத் துரத்தும் வன்மை தன் படைக் கில்லை என உணர்ந்த நெடுங்கிள்ளி, ஆவூர்க் கோட்டையி லுள்ளேயே அடங்கியிருந்தான்்.

முற்றுகை பல நாள் நீட்டித்தது. உள்ளிருப்போர்க்கு வேண்டும் உணவு முதலாம் பொருள்கள் கிடைப்பது அரிதா யிற்று ; பகைவன் ஒருவன் கன்னத் தாக்க வருகின்ருன் என்றால், ஆற்றல் வாய்ந்த அரசனயின், வருவானே எதிர்த் துத் தாக்குதல் வேண்டும்; அல்லனயின், பகைவனுக்குப் பணிந்து போதல்வேண்டும்; இரண்டும் செய்யாது அர னகத்தே அடங்கியிருத்தல் அரசர்க்கு அழகன்று; நெடுங் கிள்ளி இதை உணராணுயினன்; இதல்ை உள்ளே உறுதுயர் இடங்கொண்டது; உண்டற்குரிய உணவும், குடித்தற் குரிய நீரும் கிடைக்கப்பெருமல் யானைகள் வ்ருந்தின; பால்